பெண் பொறுக்குவதற்காகவே ‘போராளி’ வேடம் பூணும் அயோக்கியர்கள்: கவிஞர் தாமரை காட்டம்!

உரத்த சிந்தனை சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்

mukilan2 - 2026

சமூக செயற்பாட்டாளராக ஊடகங்களால் சித்திரிக்கப் படும் முகிலன் நேற்று திருப்பதி ரயில் நிலையத்தில் கைது செய்யப் பட்டார்.

முன்னதாக, தன் மீது உடன் போராட்டங்களில் கலந்து கொண்ட இசை என்ற ராஜேஸ்வரி கூறிய பாலியல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அவர் திடீரென தலைமறைவானதாகக் கூறப் படுகிறது. அதற்கு முன்னதாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பான வீடியோக்களை அவர் வெளியிடப் போவதாகவும் அதனால் அரசுத் தரப்பு ஏதாவது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் என்றும் தகவல்கள் பரப்பப் பட்டன. ஆனால் திருப்பதியில் ரயில்வே போலீஸாரால் கைது செய்யப் பட்டபோது, திடீரென கூடங்குளம் குறித்து அணுவுலை எதிர்ப்பு கருத்துகளை முழங்கினார்.

mukilan rajeswari - 2026இதனிடையே முகிலனை புனித பிம்பமாக சித்திரிப்பவர்களுக்கு கவிஞர் தாமரை ஒரு பதில் கொடுத்துள்ளார். அதில்,

ஐயோ பாவம்…நீங்க இந்த ‘போராளி அரசியல் வட்டாரத்து’க்குப் புதிது போல…கொஞ்சம் தள்ளியிருந்து வேடிக்கை பாருங்கள்… இந்த மாதிரி ‘போலிப் போராளி’களெல்லாம் நிறையப் பார்த்தாயிற்று. பெண் பொறுக்குவதற்காகவே ‘போராளி’ வேடம் பூணும் அயோக்கியர்களை உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை,

நாங்கள் கூடவே ( சோறு போட்டு வைத்து ) வாழ்ந்திருக்கிறோம். எங்களுக்குத் தெரியும், ஆதாரமில்லாமல் பேசவில்லை. Wait and Watch. பெண்ணை ஏமாற்றி விட்டு, விவகாரம் வெளியே வந்தவுடன் ஓடி ஒளிந்து கொண்டு, இப்போது ‘வெளியே’ வந்திருக்கும் அன்னாரை நீங்கள் வேண்டுமானால் மாலை போட்டு வரவேற்கப் போங்கள், எங்களிடமிருந்து செருப்புதான் கிடைக்கும்.

முகிலன் இன்னொரு தியாகு அவ்வளவுதான். தியாகு தப்பி வெளியே சுற்றுகிறான், முகிலன் உள்ளே போகப் போகிறான்…

thamarai comment - 2026

2 thoughts on “பெண் பொறுக்குவதற்காகவே ‘போராளி’ வேடம் பூணும் அயோக்கியர்கள்: கவிஞர் தாமரை காட்டம்!”

  1. ஏன் தாமரை முகலனிடமும் ஏமாந்து விட்டாளா?

  2. அடுத்தவளின் கணவனை மயக்கி கட்டிகிட்டவலெல்லாம் பெரிய சமூக சேவகி? இப்ப தாமரை என்ன தொழில் செய்கிறாள்?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.