”மாநிலங்களவை எம்பி. சீட் எனக்குதான் ஒதுக்கப்பட்டது; மதிமுக.,வுக்கு இல்லை!” வைகோ போட்ட ‘திடீர்’ குண்டு!

vaiko pic - 2026

நான் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டால், மாற்று ஏற்பாட்டை செய்யுமாறு ஸ்டாலினை சந்தித்து வலியுறுத்தினேன். மாநிலங்களவை சீட் எனக்குதான் ஒதுக்கப்பட்டது. மதிமுகவுக்கு இல்லை. நான் எம்பி ஆவதாக இருந்தால் சீட் ஒதுக்கீடு செய்வதாக ஒப்பந்தத்தின்போது ஸ்டாலின் கூறினார் என்று திடீரென ஒரு டிவிஸ்டை செய்திருக்கிறார் வைகோ.!

2009ல் திமுக., தொடர்ந்த தேசத் துரோக வழக்கில், மதிமுக, பொதுச் செயலர் வைகோ குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப் பட்டுள்ளது. அவருக்கு ஓர் ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப் பட்டுள்ளது. அவர் மேல்முறையீடு செய்ய ஒரு மாத கால அவகாசம் அளிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், அவர் இரு தினங்களுக்கு முன் மாநிலங்களவைக்குப் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார். அவரது வேட்புமனு நிராகரிக்கப் படும் பட்சத்தில், வேறொரு நபரை தேர்வு செய்ய வசதியாக, திமுக.,வில் இருந்தே மூன்றாவது வேட்பாளராக இளங்கோ வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

இந்த நிலையில், மதிமுக., சார்பில் ஏன் அந்த ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்று கேள்விகள் எழுப்பப் பட்டன. அதற்கு பதிலளித்துள்ள வைகோ., எனக்காகத்தான் அந்த ஒரு சீட் ஒதுக்கப்பட்டதே தவிர மதிமுக.,வுக்கு அல்ல என்று மதிமுக.,வினர் முகத்தில் கரியை பூசியுள்ளார்.

இதனிடையே திண்டுக்கல் செய்தியாளர்களிடம் வைகோ விளக்கம் அளித்த போது, என்னுடைய வேட்புமனு உறுதியாக ஏற்றுக்கொள்ளப்படும் என நம்புகிறேன்! என்று கூறியுள்ளார்.

வைகோ இன்று பகல் 12 மணிக்கு, திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அளித்த விளக்கம்…

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு ஸ்டாலின்  என்னோடு தொடர்புகொண்டு பேசினார். ‘நீங்கள் மாநிலங்களவை உறுப்பினராகச் செல்வதற்கு விருப்பம் இருந்தால், நீங்கள் வேட்புமனு தாக்கல் செய்வதாக இருந்தால், மாநிலங்களவை உறுப்பினருக்கான வாய்ப்பு மதிமுக.,வுக்கு வழங்கப்படும் என்றார். கட்சியினர் விரும்பியதன் பேரில், அதனை நான் ஏற்றுக்கொண்டேன்.

ஆக, நான் போட்டியிடுவதாக இருந்தால்தான் ஒரு மக்களவைத் தொகுதி, ஒரு மாநிலங்களவை இடம் என்று இருந்தது. மாநிலங்களவை உறுப்பினர் இடம் இல்லையேல் பேச்சுவார்த்தை வேறு விதமாகச் செல்வதற்கான வாய்ப்பு இருந்தது. இது எழுதப்படாத ஒப்பந்தம். எனவே, தேர்தல் உடன்பாட்டில் இதை நாங்கள் குறிப்பிட வில்லை.

இந்த நிலையில், என் மீது 124எ பிரிவின் கீழ் தேசத் துரோக வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தண்டனை வராது என்று நான் நம்பியது உண்மை. காரணம், இந்திய விடுதலைக்கு முன்பு, மகாத்மா காந்தி அவர்களும், பாலகங்காதர திலகர் அவர்களும் இதே பிரிவின் கீழ் தண்டிக்கப்பட்டார்கள். திலகர் இரண்டு முறை தண்டிக்கப்பட்டு, இரண்டாவது முறை ஆறு ஆண்டுகள், பர்மாவில் மாண்டலே சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

பண்டித ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட அத்தனை தலைவர்களும், பிரித்தானிய ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட இந்தக் கொடூரமான சட்டப்பிரிவு நீக்கப்பட வேண்டும் என்று கருத்துச் சொன்னார்கள். சுதந்தரத்திற்குப் பிறகும்கூட ஒரு கட்டத்தில் நேரு அவர்கள் சொன்னார்கள். ஆனால் நீக்கப்படவில்லை.

சட்ட மாற்றங்களைப் பற்றி ஓர் ஆணையம் பரிந்துரை செய்கின்றபோதுகூட, ராஜதுரோகக் குற்றச்சாட்டு என்கின்ற 124எ என்பது நீக்கப்பட வேண்டும் என்றுதான் சொன்னார்கள். நீக்கப்படவில்லை. ஆனால், இந்திய விடுதலைக்குப் பிறகு, இன்றுவரை, இந்தியாவில் இந்தச் சட்டப் பிரிவின் கீழ் யாரும் தண்டிக்கப்படவில்லை. பல பேர் மீது வழக்குகள் போடப்பட்டன. அந்த வழக்குகள் எல்லாம் விடுதலை ஆயிற்று. ஆனால் என் மீதான வழக்கில், 5ஆம் தேதி அன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், எனக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்திய விடுதலைக்குப் பின்னர், பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் நான் தான். அதேபோல, விடுதலைக்குப் பிறகு, தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் தண்டிக்கப்பட்டவனாகவும் நான் இருக்கிறேன்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 8(1) பிரிவின் கீழ் வரக்கூடிய குறிப்பிட்ட இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ், ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவின் கீழ், போதைப் பொருள் சம்பந்தப்பட்ட பிரிவின் கீழ், பெண்களுக்குக் கேடு செய்யும் பிரிவுகளின் கீழ், மதப் பிரச்சினைகளின் மூலமாக வரக்கூடிய பிரிவுகளின் கீழ் தண்டிக்கப்பட்டாலோ, வெறும் அபராதம் ஏற்பட்டலோகூட அவர்கள் போட்டியிட முடியாது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 8 பிரிவு 2இன் கீழ் இந்தந்தப் பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டாலும் அவர்கள் போட்டியிட முடியாது.

சில வழக்குகளில் 100 ரூபாய் அபராதம் விதித்து இருந்தாலே போட்டியிட முடியாது.

13 June04 vaiko - 2026மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 8, 3ஆவது பிரிவு என்பது எந்தக் குற்றச்சாட்டாக இருந்தாலும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அதற்கு மேல் தண்டிக்கப்பட்டால் போட்டியிட முடியாது. இப்படித்தான் சட்டம் மிகத் தெளிவாக இருக்கின்றது. எனவே என்னுடைய வேட்புமனு நிச்சமாக ஏற்றுக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றேன்.

இருந்த போதிலும், இந்தத் தீர்ப்பு வருவதற்கு முன்பே, நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் அவர்களை அறிவாலயத்தில் சந்தித்துப் பேசினேன். ‘நீங்கள் நிற்பதாக இருந்தால்தான் மாநிலங்கள் அவை உறுப்பினர் இடம் என்ற நிபந்தனையின் பேரில் நீங்கள் தந்தீர்கள். ஒருவேளை நான் தண்டிக்கப்பட்டு, அதனால் போட்டியிட முடியாத நிலைமை ஏற்படுமானால், அதற்கு உரிய மாற்று ஏற்பாட்டை நீங்கள் செய்து கொள்ளுங்கள்’ என்று, நான்தான் ஸ்டாலினிடம் கூறினேன்.

இப்பொழுது, என்னுடைய வேட்பு மனுவை ஏற்பது குறித்துத் தேர்தல் ஆணையத்திடம் கருத்துக் கேட்பதாக ஒரு செய்தி உலவுகின்றது. அது உண்மையா? பொய்யா? என்று எனக்குத் தெரியாது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், என்னுடைய வேட்புமனு உறுதியாக ஏற்றுக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை இருந்தபோதிலும்கூட, முன்னெச்சரிக்கையாக என்.ஆர்.இளங்கோ வேட்புமனு தாக்கல் செய்கின்றார்கள்.

நாளைய தினம் மனு பரிசீலனை நடைபெறுகின்றது. நான் மறுபரிசீலனைக்குப் போக முடியாது. காரணம், அதே நீதிமன்றத்தில் முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் இவர்களுக்கான வழக்கு விசாரிக்கக்கூடிய நீதிபதி சாந்தி அவர்கள் நீதிபதியாக இருக்கக்கூடிய நீதிமன்றத்தில், மற்றொரு வழக்கு விசாரணை நடைபெறுகின்றது.

எனவே, அன்று காலை 10.30க்கு அந்த நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டும். எனவே, வேட்பு மனு பரிசீலனைக்கு என்னுடைய பிரதிநிதியாக வழக்கறிஞர் தேவதாஸ் செல்வார். அந்தப் பரிசீலனையில் என்னுடைய மனு ஏற்றுக்கொள்ளப்படும் என்று நம்புகின்றேன். ஏற்றுக் கொள்ளப்பட்டால், அதற்குப் பிறகு திமுக., சார்பில் என்.ஆர்.இளங்கோ தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றுக் கொள்வார்.

எனவே இது குறித்து தேவையற்ற விவாதங்களுக்கு மதிமுக.,வினர் இடம் கொடுக்கக் கூடாது என்பதற்காகத்தான் ஊடகங்களின் வாயிலாக தெரிவிக்க விரும்பினேன்… என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

Entertainment News

Popular Categories