கல்வி இயக்குனர், இணை இயக்குனர், இயக்க அலுவலர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் மடிக்கணினி வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், 11 மற்றும் 12-ம் வகுப்புப் ஆசிரியர்களுக்கு வகுப்பு வாரியாக மடிக்கணினி வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பாடப்புத்தகத்தில் உள்ள QR Code-ஐ பயன்படுத்தி பாடம் கற்பிக்கவும், இணைய தளத்தை பயண்படுத்தி பாடம் கற்பிக்கவும் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படுவதாகவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.




