இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: பிவி சிந்து இறுதி போட்டிக்கு முன்னேற்றம்

Published:

146765 pvsindhu - 2026

இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் தொடர் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை PV சிந்து இறுதி போட்டிக்கு முன்னேறினார்

ஜகர்தாவில் இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் போட்டி நடைப்பெற்று வருகிறது. இந்தத் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இ்ந்தியாவின் PV சிந்துவும், சீனாவின் சென் மோதினர்.

முதல் சுற்றில் இருவரும் மாறி மாறி புள்ளிகளை எடுத்ததால் போட்டி பரபரப்பாக அமைந்தது. முதல் சுற்றின் முடிவில் 21-19 என்ற புள்ளி கணக்கில் PV சிந்து சுற்றை கைப்பற்றினார்.

இரண்டாவது சுற்றில் ஆரம்பத்திலிருந்தே சிந்து ஆக்ரேஷமாக விளையாடியதால் வேகமாக முன்னேறி இரண்டாவது சுற்றை 21-10 என்ற கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இதனையடுத்து இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் PV சிந்து, ஜப்பானின் யமாகுஷியும் மோத உள்ளனர்.

Related articles

Recent articles

spot_img