இன்று அத்திவரதரை தரிசனம் செய்கிறார் முதலமைச்சர்

edappadi palanisamy3

காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்றுகலந்து கொள்கிறார்.

காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை கலந்து கொள்கிறார். கடந்த 2 நாட்களாக சேலத்தில் முகாமிட்டுள்ள முதலமைச்சர், அங்கிருந்து இன்று காஞ்சிபுரத்திற்கு செல்கிறார். தற்போது அத்திவரதர் உற்சவம் நடைபெற்று வரும் நிலையில், இன்று அவர் அத்திவரதரை தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை குறித்தும், அப்போது அவர் ஆய்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் பொது தரிசனத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், பக்தர்கள் எந்த தடையும் இன்றி அத்திவரதரை தரிசிக்கலாம் என்றும் உறுதி யளித்துள்ள மாவட்ட நிர்வாகம், வழக்கமாக விஐபி தரிசனம் நடைபெறுவது போல முதல்வர் அத்திவரதரை தரிசிப்பார் எனவும் தெரிவித்துள்ளது.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.