“நான் சட்டை – கோட்டு ஒண்ணும் போட்டுக்கிறதில்லே,

947129_585338794830241_865216797_n“நான் சட்டை – கோட்டு ஒண்ணும் போட்டுக்கிறதில்லே,
தையலே இல்லாத ஒத்தைத் துணி!”
(முஸ்லிம் தையற்காரரின் வேண்டுகோளுக்கு)

(பெரியவாளின் கருணை, மதம் என்ற வேலியைத்
தாண்டி பிரவகிக்கும் வெள்ளம்.)

சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.

 தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஒரு முஸ்லிம் தையற்காரர். பெரியவாள் படத்தை
ஏதோ ஒரு பத்திரிகையில் பார்த்தாராம்.அதுமுதல்,சகலமும் பெரியவாள்தான் அவருக்கு.அவரோ திருச்சியில் இருந்தார். பெரியவாளோஊர் சுற்றிக்கொண்டிருந்தார்.எங்கே சந்திப்பது?அத்துடன் ஸ்ரீமடம் சிப்பந்திகள் பெரியவாளைத் தரிசனம் செய்வதற்கு அனுமதிப்பார்களோ, மாட்டார்களோ?

தையற்காரருக்கு அதிர்ஷ்டம்! பெரியவாள் திருச்சி
மலைக்கோட்டையில் முகாம்!

“நான், டெய்லர், சட்டை, கோட்டு எல்லாம் நல்லா
தைப்பேன். சாமிக்கு சட்டை – கோட்டு தெச்சுக்
கொடுக்கணும்னு ரொம்ப நாளா ஆசைப்பட்டுக்கிட்டிருக்கிறேன். சாமி அளவு கொடுத்தால்-பழைய சட்டைகூடப் போதும் – நாளைக்கே புது சட்டை கொண்டாந்துடுவேன்.கோட்டு தைக்க,ரெண்டு மூணுநாள் ஆகும்…..”

பெரியவாள்,பரிவுடன், அவரையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர் ஸ்ரீமடத்துக்கு ஏதாவதுகைங்கர்யம் செய்ய ஆசைப்படுகிறார் என்பது,பக்தி பூர்வமான அவர் பேச்சிலேயே தெரிந்தது.

“நான் சட்டை – கோட்டு ஒண்ணும் போட்டுக்கிறதில்லே,தையலே இல்லாத ஒத்தைத் துணி! மடத்து யானை மேலே அலங்காரமாகப் போடுகிற மாதிரி,

பெரிய துப்பட்டா – நெறைய வேலைப்பாடுகளோட செய்து கொடு…”டெய்லருக்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை.
பெரியவாள் அவரை மதித்து,பொருட்படுத்தி,
அவர் காணிக்கையை (கொஞ்சம் மாறுதலுடன்)
ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்பதை உணர்ந்து
புளகாங்கிதம் அடைந்தார்.

நான்கு நாள்கள் கழித்து ஸ்ரீமடத்து யானையின்
அளவுக்கேற்ப – இரண்டு பக்கங்களிலும் நன்றாகத்
தொங்கும்படி வண்ண வண்ண வேலைப்பாடுகளுடன் ஒரு துப்பட்டா கொண்டு வந்து சமர்ப்பித்தார். அதைப் பிரித்து காட்டச் சொல்லி, நுணுக்கமாக பார்த்துவிட்டு,கையைத் தூக்கி ஆசீர்வதித்தார்கள்.

“பட்டையன் (யானைப் பாகன்) கிட்டே கொடுத்து
இன்னிக்கே போடச் சொல்லு….”

பெரியவாளின் கருணை, மதம் என்ற வேலியைத்
தாண்டி பிரவகிக்கும் வெள்ளம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.

சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

சித்திரை மேஷ விஷு பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்...

இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

இஸ்ரேலை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற குவாஜா ஆசிஃபின் அழைப்பு "அதிர்ச்சியளிக்கிறது" என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

பீகாரின் பக்ஸார் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Topics

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

இதனால், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4 ஆம் தேதி (வியாழன் கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.

பிஜேபி., உள்ள வந்துடும்!

இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.

மெட்ரோ அரசியல்!

மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.

Entertainment News

Popular Categories