பிரதமர், ஜனாதிபதியை அவதூறாகப் பேசிய மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்

Actor Mansoor Ali Khan - 2026

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவரை அவதுாராகப் பேசியதாக நடிகரும், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவருமான மன்சூர் அலி கான் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மன்சூர் அலிகான் அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பிரதமர், குடியரசுத் தலைவர் ஆகியோரையும், அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களையும் ஒருமையில் பேசியதாக சர்ச்சை
எழுந்தது. இது தொடர்பாக, இந்து மக்கள் முன்னணி கட்சி சார்பில் சென்னை மத்திய குற்றப் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகார் மனுவில் மன்சூர் அலிகானின் சர்ச்சைக்குரிய பேட்டி யுடியூப்பில் வைரலாகி வருகிறது என்று கூறப்பட்டிருந்தது.

இந்து மக்கள் முன்னணிக் கட்சி அளித்த புகாரைப் பெற்றுக்கொண்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார், மன்சூர் அலிகான் மீது பிரிவினையைத் தூண்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஏற்கெனவே சேலம் எட்டு வழிச்சாலை விவகாரத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.