
2013 இல் அதன் ராணுவ மந்திரி A K ஆண்டோனி பேசுகிறார்.. உண்மையை ஒத்துக்கறதுல எனக்கு எந்த தயக்கமும் இல்லை.
இந்தியாவை விட சைனா உட்கட்டமைப்பில் மிகவும் மேம்பட்டு காணப்படுகிறது. இதுதான் சரித்திரம் ஏனெனில்… சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா (அதாவது நேரு மாமா) ஒரு கொள்கை வைத்திருந்தார்.
அதன்படி “தேசத்திற்கு எது நல்ல பாதுபாப்பு என்றால்.. எல்லைப்புறங்களை வளர்ச்சி அடையாமல் பார்த்துக் கொள்வது” மட்டும்தான்.
நாட்டின் வளர்ச்சியடையாத எல்லைப் புறங்கள்தான் வளர்ச்சியடைந்த எல்லைகளைவிட பாதுகாப்பானது. அதனால் தொடர்ந்து பல வருடங்களாக எல்லைப்புறங்களில் எந்த ரோடுகளும் கட்டுமானம் செய்யப்படவில்லை. அங்கு எந்த ஏர் ஃபீல்டும் கிடையாது.
ஆனால்.. அதே நேரத்தில் தொடர்ந்து சைனா தன் கட்டுமானங்களைத் தொடர்ந்து எல்லைகளில் அமைத்துக் கொண்டுவந்தது. அதன் காரணமாக நாம் அவர்களிடமிருந்து மிகவும் பின் தங்கியிருந்தோம். நம்மோடு ஒப்பிடும்போது, உட்கட்டமைப்பிலிருந்து, திறமையின் அடிப்படையிலிருந்து அனைத்திலும் சைனா மிகவும் மேம்பட்டுக் காணப்பட்டார்கள். இதைச் சொல்வதற்கு நான் வெட்கப்படவில்லை.
இதே காங்கிரஸின் இளவல்.. இத்தாலிய வாரிசு.. இப்போது வேறுவிதமாகப் பேசுகிறது.
இவர்களையும் ஒருகூட்டம் இன்றுவரை வெட்கமில்லாமல் தாங்கிப் பிடிக்கிறார்கள். என்னத்தச் சொல்ல..?
- எஸ்.பிரேமா