முருகா… சுப்ரமண்யா… சொந்த மக்களை பேரம் பேசி வேற்று மதத்தினருக்கு விற்பனை செய்யும் திருமா.,வை ‘திருத்து’!

உரத்த சிந்தனை லைஃப் ஸ்டைல்
thirumavalavan
thirumavalavan

“இது வரையில் ஒரு பிராமணர் கூட பழனிக்கோ, திருத்தணிக்கோ, அறுபடை வீடுகளுக்கோ அலகு குத்தி காவடி எடுத்து போனதுண்டா? அவர்கள் முருகனுக்காக பேச வரிந்து கட்டி கொண்டு வருகிறார்களே? தமிழ் கடவுள் முருகனனை பற்றி பேசுவதற்கு தமிழர்கள் வரட்டும்? யாரை ஏய்க்க? யாரை ஏமாற்ற? யார் மீது அவதூறு பரப்புவது? யார் மீது பழி சுமத்துவது? தி மு க ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக தான்” : திருமாவளவன்.

பிராமணர்கள் அலகு குத்தி காவடி எடுத்ததில்லை என்ற திருமாவளவன் கூறுவதே உண்மைக்கு புறம்பானது. ஒரு வாதத்திற்காக அவர் சொல்வது போல், அலகு குத்தாதவர்கள், காவடி தூக்காதவர்கள் முருகன் குறித்து பேசக்கூடாது என்றால், தான் ஹிந்து மதத்தை சாராதவன் என்றும், ஹிந்து மதத்தின் மீது நம்பிக்கையில்லை என்று கூறும் திருமாவளவனுக்கு ஹிந்து மதம் குறித்து பேசுவதற்கு தகுதியில்லை என்பதை உணரவேண்டும். இறை நம்பிக்கை இல்லாதவர்கள் இறைவன் குறித்த விமர்சனத்தை முன்வைப்பது முறையற்றது என்பதை தான் தொடர்ந்து சொல்கிறோம். நாத்திகர்களாக இருப்பதற்காக நாம் அவர்களை விமர்சனம் செய்வதில்லை. ஆனால் அவர்கள் இறை நம்பிக்கையை விமர்சனம் செய்வதை, கொச்சைப்படுத்துவதை தான் கடுமையாக எதிர்க்கிறோம், கண்டிக்கிறோம். முருகன் என்ற சொல்லுக்கு ‘அழகு’ என்ற பொருளுண்டு. அழகை ஆராதிக்க வேண்டும். அதை விடுத்து, கொச்சைப்படுத்துவது குரூர எண்ணம் கொண்டவர்களால் மட்டுமே முடியும். அதற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் குரூர எண்ணம் கொண்டவர்களாகவே கருதப்படுவார்கள்.

யார் தமிழர் என்று திருமாவளவன் சான்றிதழ் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. உலகம் முழுதும் பல நாடுகளில் உள்ள தமிழ் பேசும் அனைவரும் தமிழர்களே. தமிழை ஏற்று கொண்ட அனைவரும் தமிழரே. தமிழர்களை ஏய்த்து, ஹிந்துக்களின் மீது அவதூறு பரப்பி, பிராமணர்களின் மீது பழி சுமத்தி அரசியல் பிழைப்பு நடத்தி ஆட்சிக்கு வந்தவர்கள் மீண்டும் அராஜக ஆட்சியமைத்து விடக்கூடாது என்பதற்காக அலகு குத்தி, காவடி தூக்கி முருகப்பெருமானின் அருள் பெற தயாராகி விட்டனர் தமிழர்கள். தமிழர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற அலகு குத்தி, காவடி தூக்க முன்வருவாரா திருமாவளவன் அவர்கள்?

  • நாராயணன் திருப்பதி. @Narayanan3

பிராமணர்கள் முருகன் கோவிலுக்கு வேல் குத்துவதில்லை ஆகையால் அவர்கள் தமிழர்கள் கிடையாது ;–திருமாவளவன்
வருகிற பைபூசம் அன்று திருமாவளவன் அவர்கள் பழனி முருகனுக்கு பாதயாத்திரை சென்று வேல் குத்தி, பால் குடம் எடுத்து தமிழன் என நிரூபனம் செய்வார் ????

https://twitter.com/Sunspot66026608/status/1285571176018800641
https://twitter.com/gayathriraguram/status/1285295016299003904

@haritcn @gayathriraguram @thirumaofficial @Sundaresancen @raja6782

திருச்செந்தூர் வாழ் அந்தணர்கள் அனைவரும் ஆனி மாதம் சுக்கில சஷ்டி அன்று வேல் குத்தி அக்னிகாவடி எடுப்பது வழக்கம்.! அடுத்த வருடம் விசிக டுமிலரும் கலந்துகொள்ளலாம்

முனுசாமி ஐயர் கருப்பு ஐயர் முத்துசாமி ஐயர் வீராசாமி ஐயர் பெரியசாமி ஐயர் குப்புசாமி ஐயர் வேலுசாமி ஐயர் — உன்னால் இந்த பெயரில் ஒரு இஸ்லாமியர் பெயரையோ, மதம் மாறியபின் உண்மை பெயராக வைத்த ஒரு கிறிஸ்தவரையோ காட்ட முடியுமா ?
யார் தமிழர் ?
@JSKGopi @srjk22 @Thaaymanam @oorkkaaran

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.