நவராத்திரியின் போது அகண்ட தீபம் ஏற்றுவது ஏன்? அதன் பலன் என்ன?

Published:

deepam1
deepam1

நவராத்திரி ஸ்பெஷல்… ஆன்மீக கேள்வி பதில்!

கேள்வி: நவராத்திரியின் போது அகண்ட தீபம் ஏற்றுவதன்? காரணம் என்ன? அதன் பலன் என்ன?

பதில்:அகண்ட தீபம் ஏற்றத்தான் வேண்டும் என்ற நியமமில்லை. ஏற்றுவதில் தவறு எதுவும் இல்லை. அப்படி ஒரு சம்பிரதாயம் உள்ளது.

அகண்ட தீபம் ஒன்பது நாட்களும் கலசத்தோடு, அல்லது அடுக்கி வைக்கப்பட்ட கொலு மண்டபத்தோடு கூட இருக்க வேண்டும் என்று ஒரு சம்பிரதாயம் உள்ளது.

அகண்ட தீபம் ஏற்றும் போது அதனை ஒன்பது நாட்களும் கவனமாக ஒளிரும்படி காப்பாற்றி வர வேண்டும். அதற்கான நம்பிக்கையும் சூழலும் இருப்பவர்கள் அகண்ட தீபம் ஏற்றி வழிபடலாம்.

பொதுவாக தீபம் ஏற்றுவதன் முக்கிய உத்தேசம் தேவதைகளின் சக்தியை ஆவாகனம் செய்வதே. ஏனென்றால் தேவதைகள் ஒளி வடிவம் உடையவர்கள். பிரகாசமே வடிவமாகக் கொண்ட தேவதைகள் நம் இருப்பிடத்திற்கு வரவேண்டுமென்றால் பிரகாச வடிவான தீபம் ஏற்றப்பட வேண்டும்.

ALSO READ:  மதமாற்ற விவாதம் ... மீண்டும்!
bharani deepam
bharani deepam

அதனால்தான் தெய்வ வழிபாட்டைத் தொடங்கும்போதும் தீபம் ஏற்றுகிறோம். நடுவிலும் தீபம் காண்பிக்கிறோம். இறுதியில் கற்பூர ஆரத்தி வடிவில் ஜோதியை சமர்ப்பிக்கிறோம்.

ஜோதி வடிவினரான தெய்வங்கள் அங்கு வந்து ஆசி வழங்கும் விதமாக பூஜை தடையின்றி நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையோடு அகண்ட தீபம் ஏற்றும் வழிமுறை காணப்படுகிறது.

அதேபோல் நம் சங்கல்பம் விருத்தி அடைய வேண்டும்… அது முழுமை அடைய வேண்டும் என்ற கோரிக்கையோடும் அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது.

அகண்ட தீபம் ஏற்றி வழிபட்டால் அனைத்து தோஷங்களும் விலகும். முக்கியமாக ஆயுள் விருத்தியும் ஆரோக்கிய விருத்தியும் கிடைக்கும்.

‘லோகைக தீபாங்குரா’ ஆகிய அம்பாளை ஜோதி வடிவில் பிரதிஷ்டை செய்து வழிபடுகிறோம். அகண்ட தீபத்தில் ஜோதி வடிவத்தில் அம்மன் அசையாமல் நம் வீட்டில் வீற்றிருந்து நம் வழிபாட்டை ஏற்கிறாள்.

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img