
பூங்கோதை ஆலடி அருணா நேற்று அளவுக்கு அதிகமாக தூக்கமாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
நேற்று காலை, உடனடியாக நெல்லையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆலங்குளம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடிஅருணா, மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டார். தூத்துக்குடிக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்ட அவர், பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதனிடையே, பூங்கோதையின் விவகாரத்தை பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் அலசி ஆராய்ந்தனர். அவர் அதற்கு முந்தைய நாள் தென்காசி மாவட்டம் கடையத்தில் நடைபெற்ற திமுக., பூத் கமிட்டி கூட்டத்தில், கையெடுத்து கெஞ்சி, திமுக., ஆண்கள் சிலரில் காலில் விழும் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதைக் கண்டு பலரும் மனம் பதைபதைத்தார்கள். பெண்களுக்கு திமுக.,வினர் அளிக்கும் மரியாதையை குறித்து கருத்து தெரிவித்தனர் பலர்.
பெண்களுக்கு திமுக., காட்டும் அவமரியாதையையும் பாஜக., கொடுத்துள்ள இடத்தையும் குறிப்பிட்டு, பெண்களுக்கு மதிப்பளிக்கும் கட்சி எது என விவாதமும் களை கட்டியது.
இது குறித்த ஒரு பதிவு… வாட்ஸ்அப் பகிர்வு..!
டாக்டர் பூங்கோதையின் தற்கொலை முயற்சி நேற்று தமிழகத்தையே புரட்டி போட்ட சம்பவமாக்கிவிட்டது. விஷயத்துக்கு ஒரே காரணம் திமுக தலைமையின் பக்குவற்ற அணுகுமுறையும் அக்கட்சியின் உட்கட்சி பூசலும்!
இந்த விவகாரம் வித்தியாசமானது, தென்னகத்தில் என்ன மர்மமோ தெரியாது பிரபல அரசியல்வாதிகளுக்கெல்லாம் ஆண் வாரிசுகள் சொதப்பிவிடும் பெண் வாரிசுகளே நிலைக்கும்
மதுரை மீனாட்சியின் மண் என்பதால் என்னமோ, அதுதான் அங்கு நடக்கின்றது! பெரியசாமி மகள் கீதா ஜீவன், தங்கபாண்டியர் மகள் தமிழச்சி, ஆலடி அருணா மகள் பூங்கோதை எல்லாம் அப்படி வாரிசாக வந்தவர்களே, கட்சி தாண்டி பாஜகவின் தமிழிசை அக்கா வரை இந்த ராசி உண்டு
இப்படி பெண் வாரிசுகளுக்கு கைகொடுக்கும் பூமியினை கருணாநிதி விடுவாரா? தன் மகளை அங்கே அனுப்பி வைத்து பல்ஸ் பார்த்தார், அவர் காலத்துக்கு பின் “என் தாய் நாடார்” என புகுந்துவிட்டார் கனிமொழி
கனிமொழியின் வரவு ஒருமாதிரியான உட்கட்சி பூசலை கொடுத்தது, தென்னகம் ஸ்டாலினார் அணி கனிமொழி அணி என பிரியவில்லை என்றாலும் அப்படி காட்சிகள் நடந்தன
மிக உச்சமாக நெல்லையின் சாதி பின்னணி இதில் அழகாக வெடித்தது, நாடார் திமுகவினருக்கு திரும்பும் இடமெல்லாம் பதவியா என கொதித்தன சில சமூகம்
இப்படியே குழப்பம் மிஞ்சி கொண்டிருக்க பழனிச்சாமி தென்காசியினை தனி மாவட்டமாக்கினார்
இப்படி அரசு ஆவணபடி ஆக்கினால் மனதளவில் தமிழகத்தை ஆளும் திமுகவும் பிரிக்க வேண்டும் அல்லவா? இதனால் மாமன்னர் திருகுவளை இளவரசர் சில சீர்திருத்தங்களை செய்தார்
விளைவு வெடித்தது! உதயநிதியினை அடுத்த தலைவராக்கி பார்க்கும் ஆசையில் இருக்கும் ஸ்டாலின் வழியில் யாராவது குறுக்கே வந்தால் விடுவார்களா? அதுதான் பூங்கோதைக்கும் நடந்தது
பயங்கர ஆட்டங்கள் நடந்திருக்கின்றன ஒரு கட்டத்தில் ஒரு கோஷ்டி என்ன பெரிய திமுக? பணம் வெட்டினால் அங்கே சீட் மற்றும் மரியாதை என மிக அகங்காரமாக ஆடியதில் பூங்கோதையும் வலுத்து பிடித்திருக்கின்றார்
என்ன இருந்தாலும் பூங்கோதை கட்சிக்கு சீனியர், கனிமொழிக்கு முன்பே திமுக மகளிர் அணியின் தூணாக இருந்தவர் , அவர் காண வளர்ந்தவர் உதயநிதி
நிச்சயம் தென்னகத்தில் மிக பெரிய அனுபவமும் முன்னுரிமையும் கொண்டவர் பூங்கோதை அதில் சந்தேகமில்லை! ஆனால் கட்சியின் உட்கட்சி குழப்பங்கள் எல்லை மீறி நிற்கின்றன, பணம் இருப்போர் எதையும் சாதிக்கும் நிலைக்கு வந்தாயிற்று!
அணி அணியாக செயல்படுகின்றார்கள், தேர்தல் நெருங்க நெருங்க அது அதிகமாகின்றது! அவர் அந்த அணி இவர் இந்த அணி இவர் காசுள்ள அணி என பிரிந்து மோதுவதில் நிலைகுலைந்து வீழ்ந்து கிடக்கின்றார் பூங