பீட்ரூட் பொரியல்!

Beetroot-1
Beetroot-1

பீட்ரூட் பொரியல்

தேவையானப் பொருட்கள்:

பீட்ரூட். – 2
பெரிய வெங்காயம். – 1
காய்ந்த மிளகாய். – 2
பொரியல் பொடி – 2 டீஸ்பூன்
சோம்பு. – 1 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல். – 2 டேபிள்ஸ்பூன்
எண்ணை – 1 டேபிள்ஸ்பூன்
கடுகு. – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு. – 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 ஈர்க்கு
உப்பு – 1 டீஸ்பூன்
எலுமிச்சம் பழச்சாறு – 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)

செய்முறை:

பீட்ரூட்டை நன்குக் கழுவி, தோல் சீவி, சிறியத் துண்டுகளாக நறுக்கவும்.
வெங்காயத்தையும் பொடியாக நறுக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், உளுத்தம் பருப்பைப் போட்டு, மிளகாயைக் கிள்ளிப் போடவும். உளுத்தம்பருப்பு சிவக்கும் வரை வறுக்கவும். பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும், கறிவெப்பிலையையும் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியவுடன், பீட்ரூட்டைச் சேர்த்து கிளறி மூடி வைத்து நிதானமான தீயில் வேகவிடவும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.
அடிக்கொரு தரம் கிளறி விட்டால் போதும். தேவைப்பட்டால், ஒரு கை நீரைத் தெளித்து வேகவிடவும்.
காய் வெந்தவுடன், சோம்பை ஒன்றிரண்டாகப் பொடித்துப் போடவும். அத்துடன் பொரியல் பொடி, உப்புச் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும். பின் எலுமிச்சம் சாறு, தேங்காய்த்துருவல் சேர்த்து மீண்டும் ஒரு முறை கிளறி இறக்கி வைக்கவும்.
குறிப்பு:
இதில் சோம்பு சேர்ப்பதால், மசாலா வாசனையுடன் இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories