இப்படி செஞ்சிங்கன்னா ரொம்பநாள் வரும் குக்கர்!

cooker
cooker

குக்கர் பராமரிப்பு

  1. குக்கரின் கொள்ளளவில் 3ல் 2 பங்கு அதாவது குக்கரின் முக்கால் பகுதிக்கு மட்டும் அரிசி மற்றும் காய்கறி வகைகளைச் சமைக்க வேண்டும்.
  2. குக்கரில் உள் தட்டு வைத்து பாத்திரம் வைத்து சமைத்ததினால் அடியில் உப்புக் கறை போல் ஏற்பட்டு விடக் கூடும். அதைத் தவிர்க்கப் புளித் துண்டு அல்லது பிழிந்த எலுமிச்சம் பழத் தோல் போட்டு பாத்திரம் வைத்து சமைத்தால் கறை ஏற்படாது.
  3. குக்கரில் வேக வைக்க வேண்டிய பொருட்களை அடுப்பில் வைத்தவுடன் குக்கர் குண்டை போடக் கூடாது. சிறிது நேரம் கழித்து குக்கர் மூடியில் உள்ள வெண்ட் பைப் வழியாக நீராவி வருவதைப் பார்த்த பிறகே குண்டு போட வேண்டும். நீராவி வரவில்லையென்றால் அடுப்பைச் சிறிய அளவில் வைத்து விட்டு குக்கர் மூடியில் உள்ள வெண்ட் பைப்பில் பொருள்கள் அடைத்து இருந்தால் சுத்தம் செய்துவிட்டு குண்டு போட வேண்டும்.
  4. குக்கரில் கைப்பிடி உடைந்து விட்டால் உடனடியாகப் புதியது மாற்றி விட வேண்டும். ஏனென்றால் குக்கரில் பொருள்களை வைத்து மூடுவதற்கும் திறப்பதற்கும் கஷ்டமாக குக்இருக்கும். அதோடு அழுத்தத்தில் இருக்கும் நீராவி நம் உடம்பின் மீது படுவதற்கும் வழியாக இருக்கும்.
  5. பிரஷர் குக்கரில் உள்ள ‘காஸ்கெட்’டை சமையல் முடிந்ததும் தொட்டி நீரில் போட்டுவிட்டு எப்போது தேவையோ அப்போது எடுத்து உபயோகித்தால் நீண்ட நாள் உழைக்கும். 6. புதிய காஸ்கெட் வாங்கிய உடன் பழைய காஸ்கெட்டை எறிந்து விட வேண்டும். இல்லையென்றால் மாற்றி பயன்படுத்த வாய்ப்புள்ளது.
  6. குக்கரின் கைப்பிடியில் இருக்கும் ஆணிக்கு மாதம் ஒரு முறை எண்ணெய் விட வேண்டும். அப்போது தான் துருப் பிடிக்காமல் இருக்கும். 8. குக்கரின் வெயிட்டை ஒவ்வொரு முறையும் பயன்படுத்தும் போதும் தூசி, அடைப்புகள் முதலியன இல்லாமல் இருக்கிறதா என் பார்த்த பிறகே பயன்படுத்த வேண்டும்.
  7. குக்கர் மூடியில் பொங்கி வருவது ஒன்றும் குறையல்ல. பருப்பு வேக வைத்தால் உடன் பொங்கி வென்ட் பைப் வழியாகத் தண்ணீர் வெளிவரும். பருப்பு வேக வைக்கும் போது ஒரு கரண்டி நல்லெண்ணெய் ஊற்றினால் பொங்காது. 10. குக்கரில் காய்கறி வேகும் போது அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
  8. குக்கரின் உள்பாகத்தில் கறை படிந்து கறுப்பாகக் காணப்பட்டால் கவலைப்படத் தேவையில்லை. புளித்த மோரைக் கறையுள்ள அளவு ஊற்றி 2,3 நாட்கள் ஊற வைத்தால் அந்தக் கறை நீங்கி குக்கர் பளிச்சென்று இருக்கும்.

சமைத்து முடித்த உடன் குக்கரின் கேஸ்கட், விசில் போன்றவைகளை தனித்தனியாக கழுவி துடைக்க வேண்டும். ப்ரஸ் கொண்டு விசில் உள்ள உணவு துணுக்குகளை நன்றாக கழுவவேண்டும்

சிலர் குக்கர் மூடியைத் திறந்தபின்பு கேஸ்கெட்டை எடுக்காமல் அப்படியே வைத்துவிடுவார்கள். சிலர் கேஸ்கெட்டை இரண்டு, மூன்று நாள்களுக்கு ஒரு முறைதான் சுத்தம் செய்வார்கள். இது மிகவும் தவறு. சூட்டோடு அப்படியே போடுவதால் ரப்பர் அப்படியே இறுகிப்போய்விடும். இதனால் கேஸ்கெட் அதிக நாள் உழைக்காது. சமையல் முடிந்தவுடனேயே குக்கரின் மூடியைத் திறந்து ரப்பர் கேஸ்கட்டைக் கழற்றி அதை நன்கு சுத்தமாகக் கழுவி நன்கு இழுத்துவிட்டுப் பின்பு உரிய இடத்தில் மாட்டவேண்டும். இப்படிச் செய்தால் ரப்பர் கேஸ்கெட் அதன் ஒரிஜினல் சைஸில் இருக்கும். நீண்ட நாள் உழைக்கும்.

தற்போது காப்பர் பாட்டம், நான் ஸ்டிக் சாண்ட்விட்ச் போன்ற வகைகளைப் பயன்படுத்துகிறார்கள். கேஸ் அடுப்பில் தீயை அதிகமாக வைத்து இவற்றைப் பயன்படுத்தக் கூடாது. தண்ணீர் அதிகம் இல்லாமல், தீயும் அதிகமாக இருந்தால் பாத்திரம் சீக்கிரம் கெட்டுவிடும். இவ்வகைப் பாத்திரங்களைப் பயன்படுத்தும்போது அடுப்பில் தீயை ரொம்பவும் குறைத்து “சிம்’மில் வைத்தாலே போதும்.

குக்கரின் மூடி சரியாக இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். லூசாக இருந்தால் உடனே மாற்றவேண்டும். அடிக்கடி எண்ணெய் ஊற்றி பராமரித்தால் நீண்ட நாட்களுக்கு வரும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories