மாலை நேர சுவை கூட்ட கேரட் பாதுஷா!

Published:

Carrot-Padusha
Carrot-Padusha

கேரட் பாதுஷா
தேவையான பொருட்கள்
கேரட் – 1/4 கிலோ,
மைதா – 150 கிராம்,
சர்க்கரை – 150 கிராம்,
டால்டா – 2 ஸ்பூன்,
ஏலக்காய் – 5,
உப்பு – 1 சிட்டிகை,
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை
கேரட்டை ஆவியில் வேக வைத்து மசிக்கவும்.
அதில் மைதா, ஏலக்காய் தூள், டால்டா விட்டு, தண்ணீர் விடாமல் மெதுவாக பிசைந்து கொள்ளவும்.
மாவை பாதுஷா போல் செய்து கொள்ளவும்.
சர்க்கரையை கம்பி பாகு காய்ச்சி வைத்துக் கொள்ளவும்.
எண்ணெயை சூடாக்கி பாதுஷாக்களை சிவக்காமல் பொரித்து எடுத்து, பாகில் போடவும்.
5 நிமிடம் ஊறிய பின் எடுத்து, பரிமாறவும்.

Related articles

Recent articles

spot_img