மச்சம் சொல்லும் மிச்சம்: நினைத்ததை முடிக்கும் வல்லமை!

Published:

Mole-2
Mole-2

மூக்கில் மச்சம்
இவர்கள் முன்கோபிகள்; சிடுசிடு சுபாவமிக்கவர்கள். மனைவி மக்களிடம் ஒருவித கெடுபிடியுடன் இருப்பார்கள்.

மூக்கின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் நினைத்ததை நடத்தி முடிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள்.

மூக்கின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் எதையும் நம்பாதவர்களாக இருப்பார்கள். தவறான பெண்ணின் நட்பு சிநேகமும் இவர்களுக்கு இருக்கும்.

மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் அவர்கள் தயக்க குணம் உள்ளவர்களாக இருப்பார்கள். சற்றே கர்வமும், சற்றே பாதுகாப்பு உணர்வும் இவர்களிடம் மிகுந்திருக்கும்.

மூக்கின் கீழே மச்சமுள்ளவர்கள் கேடான வழிகளில் பணத்தை செலவிடுபவர்களாக இருப்பார்கள்.

பெண்கள்:

பெண்களுக்கு மூக்கு நுனியில் மச்சம் இருந்தால், சேவா மனப்பான்மை பெற்றிருப்பார்கள். அணிமணிகளில் விருப்பம் இருக்காது. திருமண விருப்பம்கூட இல்லாமல் சந்நியாசிபோல இருப்பார்கள்

மூக்கின் மேல் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் உயர்ந்த செயல்திறன், பொறுமை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

மூக்கின் வலதுபுறம் மச்சம் உள்ள பெண்கள் – இவர்களுக்கு நல்லது எது, கெட்டது எது என்பதை கணிக்க கடினமாக இருக்கும்.

ALSO READ:  சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மூக்கின் இடதுபுறம் மச்சம் உள்ள பெண்கள் – இவர்களுக்கு கூடா நட்பு, சக பெண்களால் அவமானம் ஏற்படும்.

மூக்கின் நுனியில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்களுக்கு வசதியான வாழ்க்கையும், வாழ்க்கையில் திடீர் ஏற்றங்களும் இருக்கும்.

வளரும்……

Related articles

Recent articles

spot_img