அருமையான சுவையில் கோதுமை பாதாம் பர்ஃபி!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
wheat Padam bhrfi - 2026

கோதுமை பாதாம் பர்ஃபி

தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – 100 கிராம்
பாதாம் தூள் – 50 கிராம்
சர்க்கரை – 125 கிராம்
நெய் – 2 மேசைக்கரண்டி

செய்முறை
முதலில் பர்ஃபி செய்ய தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் சிறிது நெய்யை ஊற்றி, கோதுமை மாவை போட்டு மிதமான தீயில் வறுக்கவும்.

அதனுடன் பாதாம் தூளை போட்டு இடையிடையே நெய்யை ஊற்றி பச்சை வாசனை போகும் வரை 3 நிமிடங்கள் நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும்.

கிளறிய மாவு நன்றாக வறுப்பட்டதும் (பார்ப்பதற்கு தயிர் தன்மை வரும் வரை) கிளறி அடுப்பை அணைத்து விடவும்.

அதே நேரத்தில் வேறொரு பாத்திரத்தில் சிறிது நீர் விட்டு சர்க்கரையை போட்டு கிளறி மிதமான தீயில் கம்பி பாகு வரும் வரை கொதிக்க விடவும்.

கம்பி பாகு வந்ததும் உடனே மாவு கலவையில் கொட்டி அடுப்பை சிம்மில் வைத்து கைவிடாமல் கிளறவும்.

ஓரிரு நிமிடங்களில் வாணலியில் ஒட்டாமல் கெட்டியாக ஆரம்பிக்கும்.

பாத்திரத்தில் ஒட்டாத பதம் வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியதும் துண்டுகள் போடவும்.

சுவையான சாஃப்டான கோதுமை பாதாம் பர்ஃபி ரெடி. மேற்சொன்ன அளவுகளில் செய்தால் கிட்டதட்ட 20 துண்டுகள் போடலாம். தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் செய்தால் குறைந்த நேரத்தில், குறைந்த செலவில் எளிதாக செய்து நிறைய பேருக்கு கொடுக்கலாம். இதில் பாகு பதம், கொட்டும் பக்குவம் மட்டும் சரியாக பார்த்து கொண்டால் பத்தே நிமிடங்களில் அருமையான சாப்டான பர்பி ரெடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.