ஆசப்பட்டு சாப்பிடுவாங்க பூசணி வடகம்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Pumpkin vadakam - 2026

பூசணிக்காய் வடகம்

தேவையான பொருட்கள்

பூசணிக்காய் நறுக்கியது -2 கப்
உருட்டு உளுந்து – 1/4 கப்
துவரம் பருப்பு -1/4 கப்
உப்பு – 11/4 தேக்கரண்டி
மிளகாய் வத்தல் -6
பச்ச மிளகாய் -2 நீளமான பெரியது
பெருங்காயம் -1/4 தேக்கரண்டி
கருவேப்பிலை -4 ஆர்க்கு
வடகம் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்
செய்முறை
பூசணிக்காயை தோலோடும் குடலோடும் நறுக்கிக்கொள்ளவும்.‌ அதோடு பருப்புகள் சேர்த்து கிளறி ஊற வைக்கவும். தண்ணீர் விட தேவையில்லை. பருப்புகள் ஊறிய பின் மிளகாய் வத்தல் பச்ச மிளகாய் உப்பு பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும் இதில் கருவேப்பிலை கிள்ளி போட்டு கலந்து சிறுசிறு வடகமாக கிள்ளி கிள்ளி தட்டில்/வெள்ளை துணியில்/பாலிதீன் கவரில் வைத்து நான்கு ஐந்து நாட்கள் வெயிலில் நன்கு காய வைத்து எடுக்கவும்.
தேவைப்படும் போது கடாயில் எண்ணெய் விட்டு வடகத்தை பொரித்து எடுத்துக்கொள்ளவும்.

பூசணிக்காயின் தோல் விதை குடல் இப்படி எந்த பகுதியையும் வீணாக்காமல் செய்யப்படும் வடகம் இது. இதை பொரித்து தயிர் சாதத்துடன் சாப்பிடலாம் அல்லது கீரை மசியலில் சேர்க்கலாம். மாலை நேர ஸ்நாக்ஸ் ஆகவும் சாப்பிடலாம்.

ஒரு வேளை காய்ந்தவுடன் பொரித்தால் வடை போன்று அருமையான சுவையுடன் இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.