புதுவகை சுவையில் கோதுமை வடாம்!

Published:

wheat vadam - 2026

கோதுமை வடாம்
தேவையான பொருட்கள்
முழு கோதுமை. – 1கப்
உப்பு. – தேவைக்கு
பச்சை மிளகாய். – 3
சீரகம். -1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள்-1/4 டீஸ்பூன்

செய்முறை
கோதுமை ரவை 8 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். அதனை அரைத்து மூன்று முறை பால் எடுக்கவும். அரைத்த பாலினை ஒர் இரவு முழுக்க புளிக்க வைத்து மேலோடு இருக்கும் நீரினை ஊற்றி விடவும்.

கெட்டி பாலை அளக்கவும்.1 கப்ப்பிற்கு 3 கப் தண்ணீர் வைக்கவும். குக்கரில் 3 கப் நீரினை ஊற்றிஉப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.பின் கோதுமை பாலை ஊற்றி கைவிடாமல் கிளறவும்.

நன்கு வெந்து கண்ணாடி போல் மாவு பதம் வரும் போது பச்சை மிளகாய் விழுது+பெருங்காயப்பொடி+சீரகம் சேர்த்து கலக்கவும். கெட்டியாக மாவு வந்து கையில் ஒட்டாமல் வரும் பதத்தில் இறக்கவும்.

இதில் பாதி கெட்டியான மாவு கூழ் வத்தல் செய்ய தனியாக எடுத்துக் கொண்டேன்.
பின் மீதி இருக்கும் மாவில் நன்கு கொதித்த நீரை ஊற்றி ஸ்பூனால் எடுத்து ஊற்றும் பதத்தில் கலக்கவும்.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

ஈரமான துணியில் கெட்டிமாவு முறுக்கு அச்சியில் பிழிந்தும்,நீர்க்க மாவை ஸ்பூனால் ஊற்றியும் வெயிலில் காயவைத்து எடுக்கவும். பின் மறுநாள் துணியின் மறுபக்கத்தில் நீரை தெளித்து வற்றலை எடுத்து 2 -3 நாட்கள் வரை வெயிலில் காயவைத்து எடுக்கவும்.

Related articles

Recent articles

spot_img