அட்டகாசமா ஸ்பிரிங் ஆனியன் சாம்பார்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
spring onion sambar - 2026

வெங்காயத்தாள் சாம்பார்
தேவையான பொருட்கள்

1/4 கப் துவரம் பருப்பு
1/2 கப் வெங்காயத்தாள்
1டேபிள் ஸ்பூன் சாம்பார் பொடி
1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
1/2 டீஸ்பூன் மல்லித்தூள்
ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள்
புளி சிறிய எலுமிச்சை அளவு
உப்பு தேவையான அளவு
தாளிக்க :
1டீஸ்பூன் நெய்
1/4டீஸ்பூன் கடுகு
1சிறிய வெங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை
துவரம்பருப்பை நன்கு கழுவி, வேகவைத்து வைக்கவும். வெங்காயம், வெங்காயத்தாளை கழுவி, நீளமாக நறுக்கிக்கொள்ளவும். புளியை கரைத்து வைத்துக்கொள்ளவும். வாணலியில் நெய் சேர்த்து, கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, மிளகாய் தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, வேகவைத்து வைத்துள்ள பருப்பு, புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்கும் போது, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தாள் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் வெந்தவுடன் மல்லி இலை தூவி இறக்கவும். இப்போது சுவையான வெங்காயத்தாள் சாம்பார் சுவைக்கத்தயார். சாதத்துடன், இட்லி தோசையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.