உங்க வீட்ல உள்ளவங்கள அசத்த வெங்காயத்தாள் புலாவ்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
spring Onion Pulao - 2026

வெங்காயத்தாள் புலாவ்
தேவையான பொருட்கள்

பொன்னி பச்சரிசி அல்லது சீரக சம்பா அல்லது பாசுமதி -1/4 கிலோ
எண்ணெய் + நெய் – 2+1 மேஜைக்கரண்டி
சீரகம்-1/2 தேக்கரண்டி
நறுக்கிய வெங்காயம் -1
இஞ்சி பூண்டு விழுது -2 தேக்கரண்டி
கரம் மசாலா -1/4 தேக்கரண்டி
வெங்காயத்தாள் நறுக்கியது – 1/2 கப்
பச்சை மிளகாய் கீறியது -1
தண்ணீர் -1:1.5
எலுமிச்சை சிறியது – பாதி
உப்பு – தேவைக்கு.
செய்முறை
அரிசியை நன்கு அலசி ஊற வைக்கவும்.
குக்கர் அல்லது பாத்திரத்தில் எண்ணெய்,நெய் விடவும்.சீரகம் சேர்க்கவும்.வெங்காயம் வதக்கவும்.இஞ்சி பூண்டு கரம் மசாலா,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.வெங்காயத்தாள் சேர்த்து பிரட்டவும்.
தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து கொதி வரவும் கால் மணி நேரம் ஊறிய அரிசி சேர்க்கவும்,எலுமிச்சை பிழியவும்.மூடி சிம்மில் வேக விடவும்.
7 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.
ஆவியடங்கியவுடன் திறக்கவும்.பிரட்டி விட்டு கெட்டி பருப்புடன் பரிமாறவும்.தொட்டுக்கொள்ள ஊறுகாய்,பப்படம் மட்டுமே போதும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.