karuvepilai milaku pundu kuzhambu
karuvepilai milaku pundu kuzhambu

கறிவேப்பிலை – மிளகு – பூண்டு குழம்பு

தேவையானவை:
பூண்டு – 100 கிராம்,
மிளகு, தனியா – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2,
கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு,
புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – 100 மில்லி.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு தனியா, மிளகு, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து வறுத்து, அரைத்துக்கொள்ளவும். பூண்டினை தோல் உரித்து எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். வாணலியில் புளிக்கரைசலை விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். இதில் வதக்கிய பூண்டு சேர்த்து, அரைத்து வைத்ததையும் சேர்க்கவும். பூண்டு வெந்ததும், கடுகு – உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி இறக்கவும்.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending