உடல் நாற்றம் அகல
எலுமிச்சம் பழச்சாற்றைக் குளிக்கும் நீரில் கலந்து குளித்திட வேர்வை நாற்றம் அகலும்.
உடல் உஷ்ணம் தனிய
பச்சைப் பருப்பையும், வெள்ளரிக்காயையும், தக்காளியையும், வெந்தயத்தையும் சேர்த்துக் கூட்டு போல செய்து உண்டுவர உடல் உஷ்ணாம், உடல் எரிச்சல், நீர்க்கடுப்பு முதலியவைகள் குணமாகும்.
உடல் பத்து நீங்கிட
அத்தி இலையை தேங்காய் எண்ணையில் போட்டுக் காய்ச்சி பத்து உள்ள இடங்களில் தடவி வந்தால் தோலில் காணும் பத்து நீங்கும்.
தவசு முருங்கை, மிளகு இவ்விரண்டையும் தனித்தனியாக பவுடர் செய்து வைத்து ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு நீராகாரம் அருந்திவர எல்லாவித பத்தும் அகலும்.
மது விஷம்
6 பச்சை நெல்லிக்காயையோ அல்வது நெல்லிக்காய்ப் பொடி, நெல்லிக்காய்ச் சாறு, நெல்லிக்காய் லேகியம் இவை மூன்றில் ஏதேனும் ஒன்றைத் தொடர்ந்து 21 நாட்கள் உண்டு வந்தால், மது குடிப்பதால் உடலில் உருவாகியுள்ள விஷத் தன்மைகள் அகன்றுவிடும்.
சுளுக்கு குணமாக
வெள்ளைப் பூண்டையும், உப்பையும் சம அளவு எடுத்து இடித்து சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் தடவி வர சுளுக்கு குணமாகும்.
கட்டிகள் பழுத்து உடைய
தேனையும், சுண்ணாம்பையும் சம அளவாய்க் கலந்து கட்டிகளின் மேல் வைத்துக் கட்டிவர, கட்டிகள் பழுத்து உடையும்.