கவிஞர் பிறைசூடனின் மறைவு வருத்தம் அளிக்கும் விஷயம், அவரின் மரணத்தை விட வலி நிறைந்தது ஒரு இந்து கவிஞன் உரிய அங்கீகாரமில்லாமல் மறைந்தது
கண்ணதாசனும், வாலியும் தவிர பெரும் அடையாளமிடபட்ட இந்து கவிஞர்கள் யாருமிலை. காரணம் இவர்கள் காலத்தால் மூத்தவர்கள், காலம் இவர்களுக்கு சில வாய்ப்புகளை கொடுத்தது
கண்ணதாசன் திமுகவில் இருந்தவர் என்பதாலும் பின் காங்கிரஸ் மற்றும் அதிமுகவின் ஆதரவில் இருந்ததாலும் கடைசி வரை நட்சத்திர அந்தஸ்தில் இருந்தார்
வாலி மாயவேலைகள் செய்வதில் கில்லாடி, முழு ஆன்மீகவாதியான நீங்கள் சில சினிமா பாடலிலும் நாத்திக அரசியல் மேடைகளிலும் தென்படுவது ஏன் என கேட்டதற்கு “நான் தமிழை தாலாட்டும் தாய், அதேநேரம் சில இடங்களில் வாலாட்டும் நாய்” என அமைதியாக தன்னை ஒப்புகொண்டார்
இவர்களை தவிர இந்து கவிஞர்கள் வளர கூடாது என்பதில் திராவிட அரசுகளும் அவர்களின் பின்னணி சக்திகளும் வலுவாய் இருந்தன
இதில்தான் பிறைசூடன் போன்றவர்கள் மறைக்கபட்டனர், அவர் முழுக்க மறைக்கபட்ட காரணம் அவர் எப்பொழுதும் குங்குமம் தரித்த இந்து, பக்தி பாடல்கள் எழுதும் இந்து என்பதால்
வைரமுத்துவும், பா.விஜயும் இன்னும் பலரும் கருணாநிதியால் கொண்டாடபட காரணம் அவர்களெலாம் “புரட்சி”, “மதசார்பற்ற”, “மான்ட நேய” என்ற அடைமொழியில் அடைக்கபட்டதாலே
1980க்கு பின் இங்கே இந்து கவிஞர்கள் அடையாளம் பெற்றுவிட கூடாது என்றும், முழு இந்து மனப்பான்மை கொண்டவர்கள் கலையுலகில் வந்துவிட கூடாது என்றும் ஒரு கும்பல் திட்டமிட்டு வேலை செய்தது தெரிகின்றது
அந்நிலை இப்பொழுது இன்னும் அதிகமாகியிருக்கின்றது
இங்கே சினிமாவில் இருந்து கொண்டு திமுகவினை அல்லது அவர்களின் கைகூலி அமைப்புக்களை தொட்டவர்கள் சரிவார்கள்
விஜயகாந்த் முதல் பலரை இதில் சொல்லலாம்
இங்கே தேசியவாதி கலைஞர்களும், இந்துத்வ கலைஞர்களும் எழமுடியாது, அடி அப்படி விழும்
ஆனால் பா.ரஞ்சித்தர் போன்றவர்கள் வருவார்கள், அவர்களுக்கு ரஜினிகாந்தே வந்து ஆதரவு தெரிவித்து கைதூக்கிவிடுவார், ஏனென்றால் அதுதான் தமிழ் சினிமா
இப்பொழுதும் பாருங்கள் “ருத்ர தாண்டவம்” படத்துக்கு எந்த சக சினிமா பிரபலங்களும் வாய் திறக்காது, அதை வாழ்த்தியோ இல்லை குறிப்பிட்டோ ரஜினி முதல் லைட்பாய் வரை யாரும் பேசமாட்டார்கள்
எந்த பத்திரிகையும் ஊடகமும் வாய் திறக்காது
ஏனென்றால் அதுதான் தமிழக கலை உலகம், இந்த தேசத்துக்கும் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் மட்டும் அடையாளமிட்டு பெயர் எடுக்க முடியும் எனும் அந்த ரகசிய பிடி கொண்ட கலை உலகம்
இதில் கடைசிவரை போராடி, வாய்ப்பு கிடைத்தபொழுதெல்லாம் மிகபெரிய ஹிட் பாடல்களை கொடுத்தவர் பிறைசூடன்
எந்நிலையிலும் தன் சிவனுக்குரிய பெயரை அவர் மாற்றவுமில்லை, தன் நெற்றியில் இந்து அடையாளமின்றி வந்ததுமில்லை
போராடி இடம் பிடித்த அவர் சினிமாவில் சாதித்தை விட இந்துமதத்துக்கு செய்தது அதிகம்
சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தி பாடல்களை அவர் எழுதினார், ” ‘ஸ்ரீராம ராஜ்யம்” எனும் தமிழ் தெலுங்கு திரைபடத்துக்கு முழு வசனமும் பாடலும் அவர்தான் எழுதினார்
கண்ணதாசனின் பாதிப்பு அவரில் இருந்தது, கண்ணதாசனின் கலை உலக வாரிசு எனும் பட்டத்துக்கு அவர் நிச்சயம் தகுதியானவரே
ஆனால் உரிய அங்கீகாரம் அவருக்கு கொடுக்கபடவில்லை
அந்த நல்ல இந்து கவிஞன் தன் வாழ்வினை முடித்துவிட்டான், அவன் இன்னொரு காலம் பிறந்துவரட்டும் வரபோகும் இந்து இந்தியாவில் எதிர்காலத்தில் பிறந்து இப்பொழுது பெறாத அங்கீகாரத்தையெல்லாம் அப்பொழுது பெறட்டும்
தமிழக இந்துக்கள் எவ்வளவு பரிதாபமாக இருக்கின்றான் என்பதை தன் சாவில் சொல்லி கொண்டிருக்கின்றார் பிறைசூடன், தமிழ் இந்து உலகின் அவலம் அவர் மரித்தபின் தெரிகின்றது
ஆம், அந்த இந்து கவிஞன் எழுதிய சினிமா பாடல் எல்லோருக்கும் தெரிகின்றது, ஆனால் அவன் எழுதிய இந்து பக்தி பாடல்கள் யாருக்கும் தெரியவில்லை
அதை ஊடகங்கள் சொல்லவில்லை, தமிழக இந்துக்களும் சொல்லவில்லை
ஏன் என்றால் அதுதான் தமிழ்நாடு, அங்கிருக்கும் பல மர்மங்கள் இப்படியானவை, அதுபற்றி தமிழக தமிழனுக்கு கவலையோ ஆதங்கமோ அக்கறையோ ஒரு காலமும் இல்லை, அந்த உத்தம கவிஞனுக்கு செய்யபட்டு கொண்டிருக்கும் மிக பெரிய அநீதி இது.
ஒருவன் அளித்த கலை படைப்பினை அவன் இறந்த நேரத்தில் சொல்லி அழுவதுதான் இந்து கலாசாரம். அந்நேரமும் அவன் எழுதிய இந்துபாடல்கள் வெளியே தெரியவே கூடாது என நினைப்பதெல்லாம் அந்த கவிஞனுக்கு செய்யபடும் மிகபெரிய அநீதி
- Stanley Rajan