தாகம் தணிக்க வந்த சிங்கம் ஒன்றை ஆமை ஒன்று விடாமல் துரத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மற்ற மிருகங்கள் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும். சிங்கம் மறைந்திருந்து தாக்கி தன்னுடைய வேட்டையை சிறப்பாக முடித்துக் கொள்ளும்.
ஆனால் இங்கே சிங்கம் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கிறது. நீருக்குள் ஏதோ ஒன்று நீந்தி வருவது போல இருக்கவும், ஏதோ டிஸ்கவரி சேனல் விவகாரமாய் இருக்கிறது என்று கூர்ந்து கவனித்தால் கை அகலம் கூட இல்லாத ஒரு குட்டி ஆமை.
நகர்ந்து நகர்ந்து சிங்கத்தின் வாய் அருகே போய் நின்று கொண்டு ஏதோ செய்ய முயலுகிறது. ஆனால் சிங்கமோ இந்த ஆமை வருவதை பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து அருகே சென்று தண்ணீர் அருந்துகிறது. அந்த ஆமை விடாமல் கூடவே வர நகர்ந்து கொண்டே இருக்கிறது அந்த சிங்கம்.
தண்ணீரை குடித்து கொண்டிருக்கையில் நாக்கின் உள்ளே நாசுக்காக வந்து நிற்கின்றது ஆமை.
இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்த வீடியோவை சுமார் 53 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்டில் தெரிவிக்கவும்.
After taking the booster dose pic.twitter.com/bpJe72Ex95
— Susanta Nanda IFS (@susantananda3) October 7, 2021