லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பனீர் பிரியாணி!

Published:

paneer piriyani - 2026

பனீர் பிரியாணி
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி – 2 டம்ளர்
பனீர் – ஒரு பாக்கெட்
வெங்காயம் – ஒன்று (பெரியது)
தக்காளி – 2
பச்சைமிளகாய் – 2
மிளகாய்த்தூள் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – சிறிது
இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி (குவியலாக)
பட்டை கிராம்பு ஏலக்காய்த்தூள் – கால் தேக்கரண்டி
பிரியாணி இலை – ஒன்று
கல்பாசி இலை – சிறிது
ஏலக்காய் கிராம்பு தலா – 3
பட்டை – சிறு துண்டு
எலுமிச்சை – பாதி பழம்
புளிக்காத தயிர் – ஒரு குழிக்கரண்டி
பச்சை பட்டாணி – சிறிது (ஒரு கைப்பிடி அளவு)
மல்லி இலை – சிறிது
புதினா – சிறிது
நெய் – 4 தேக்கரண்டி
எண்ணெய் – ஒரு குழிக்கரண்டி

செய்முறை

தக்காளி, வெங்காயம் இரண்டையும் நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். மிளகாயை கீறி வைக்கவும். அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

பனீரை சிறுத் துண்டுகளாக நறுக்கி கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வறுத்து வைக்கவும்.

அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி இலை, பிரியாணி இலை போட்டு தாளித்து பின் வெங்காயம், தக்காளி, மிளகாய், பச்சை பட்டாணி போட்டு வதக்கி இஞ்சி பூண்டு விழுது, பட்டை, கிராம்பு, ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

அதனுடன் தயிர் சேர்த்து கிளறி விட்டு 3 1/2 டம்ளர் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

கொதி வந்ததும் அரிசியை போட்டு தண்ணீர் வற்றி வரும் பொழுது சிம்மில் வைத்து புதினா, மல்லி இலை, லெமன் சாறு, நெய், பனீர் சேர்த்து மூடியை போட்டு மூடவும். பின்னர் வெய்ட் போட்டு சிறு தீயில் 5 நிமிடம் வைத்திருந்து இறக்கவும்

ஆவி போனதும் மூடியை திறந்து ஒரு முறை அடி வரை கிளறி வைக்கவும்.
சுவையான பனீர் பிரியாணி ரெடி

ALSO READ:  வித்யா ததாதி விநயம்! பணிவே வெற்றியாளரின் உன்னதப் பண்பு!

Related articles

Recent articles

spot_img