திருவண்ணாமலை ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் இந்தியாவின் தலைசிறந்த மகான். ஸ்ரீ ஸ்வாமிகள் 1870-ம் ஆண்டு தை மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் காஞ்சிபுரத்தில் அன்னை காமாட்சியின் அருளால் ஸ்ரீ வரதராஜர் மரகதம் தம்பதிகளுக்கு முதல் மகனாக அவதரித்தார்கள். தனது சிறு வயதிலேயே தந்தையை இழந்து அன்னை மரகதம் மற்றும் தாத்தா காமகோடி சாஸ்திரிகளால் வளர்கப்பட்டு கல்வி பயின்றார்கள். ஸ்வாமிகளின் அன்னை மரகத்தின் இறுதிக் காலத்தில் தனக்கு இட்ட கட்டளையான திருவண்ணாமலைக்குச் செல்ல வேண்டும் என்ற கூற்றை ஏற்று திருவண்ணாமலை அடைந்து, 40 ஆண்டுகள் வாழ்ந்து 1929-ல் ஜீவ சமாதி அடைந்தார்கள்.ஸ்ரீ ஸ்வாமிகள் சிறு வயதில் கடையில் இருந்த கிருஷ்ண விக்ரஹம் கேட்டு வாங்கிய உடன் அந்த கடையிலிருந்த அனைத்து விக்ரஹங்களும் விற்று விட்டது, அதிலிருந்து ஸ்ரீ ஸ்வாமிகளை தங்கக்கை சேஷாத்ரி என அழைத்தனர்.பக்தர்களின் துயர் பொருக்காத ஸ்ரீ ஸ்வாமிகள் சிலருக்கு ஆசி வழங்கி துயர் நீக்குவார்கள், சிலரை கோபம் கொண்டு அடித்து அவர்களின் இன்னலை நீக்கியுள்ளார்கள். ஶ்ரீ ஸ்வாமிகளின் கருணை உள்ளம் பக்தர்களை எப்போதும் காத்துக் கொண்டுள்ளது.திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் 148 ஆண்டு ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு ஹோமம், அன்னதானம் , ஆடைதானம், நடைபெற்றது. ஏற்பாடுகளை தலைவர், மற்றும் டிரஸ்ட்டிகள் செய்திருந்தனர்.
Popular Categories



