நடிகர் கமல் தனது அரசியல் பயணத்தினை ராமநாதபுரத்தில் இருந்து, வரும் 21ம் தேதி துவங்க போவதாக கூறியிருந்தார். எனினும் தனது மன்ற நிர்வாகிகளிடம் இது குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து அவர் தற்போது பிப்ரவரி 21 ராமேஸ்வரத்தில் உள்ள கலாம் வீட்டில் தனது அரசியல் பயணத்தை தொடங்கி, அன்று மாலை மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை அறிவிக்கயிருக்கிறார். இந்தப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ஆந்திரா,கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள கமலின் ரசிகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுக்கூட்டத்தில் பொதுமக்களை பங்கேற்க வைக்க வேண்டுமென ரசிகர்களுக்கு கமல் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



