வைரலாகும் ஆப்பிள் பக்கோடா!

apple - 2026

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.

தற்போது ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் (Viral Video) ஆகி வருகிறது.

சமீப காலங்களில், சமையல் கலையில் பலருக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. பல வித ஆன்லைன் தளங்கள் மூளம் புதிய உணவு வகைகளை கற்றுக்கொண்டு அவற்றை செய்து பார்த்து மகிழ்கிறார்கள், பிறருக்கு அளித்து திருப்தி அடைகிறார்கள். இதில், வினோதமான உணவு கலவைகளுக்கும் பஞ்சமில்லை.

சொல்லப்போனால், வினோதமான உணவு வகைகள் தான் தற்போதைய டிரெண்டாக உள்ளன. சமூக ஊடகங்களில் (Social Media) வைரலாக வேண்டும் என்ற ஒரே காரணத்தால், பலர் ருசியான பல உணவுகளையும், பல்வேறு கலவைகள் மூலம் கெடுத்து விடுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு வினோத உணவு வகை பற்றிய வீடியோதான் தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்த ஃப்யூஷன் உணவுகளில் சில முயற்சிகள் செய்யத் தகுந்தவை என்றாலும், மற்றவை முற்றிலும் தேவை இல்லாதவையாகவே உள்ளன. இவை உணவுப் பிரியர்களின் கோபத்தை அதிகமாக்குகின்றன.

இந்த வகை உணவுகளில் சமீபத்திய சேர்க்கை, ஆப்பிள் பக்கோடா ஆகும். ஆம், இது உண்மைதான்!! நாம் அனைவரும் பக்கோடாவை விரும்பி சாப்பிடுவது வழக்கம். அதுவும் குளிர்காலங்களில் சுடச் சுட பகோடா கிடைத்தால், யாருக்குதான் கசகும்? ஆனால், ஆப்பிள் கொண்டு பகோடா போடுவதா?

தற்போது வைரல் ஆகி வரும் ஒரு வீடொயோவில், ஒரு ஃபுட் வ்ளாகர் ஆப்பிளை பஜ்ஜி போண்டா செய்யும் மாவில் தோய்த்து எடுத்து, அதை சூடான எண்ணெயில் பொரிக்கிறார். சிறிது நேரம் வறுத்த பிறகு, அவர் அதை வெளியே எடுத்து மென்று, “அருமை” என்று கூறி, பார்வையாளர்களுக்கு ‘தம்ப்ஸ் அப்’ காட்டுகிறார்.

இன்ஸ்டாகிராமில் @whathowtry என்ற பயனர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், வ்ளாகர், ஆப்பிளை இரண்டாக நறுக்கி, பக்கோடா மாவில் தோய்த்து, பின்னர் பொரித்து எடுத்து உண்பதைக் காண முடிகின்றது.

பகிரப்பட்டதிலிருந்து, இந்த வீடியோ 7400க்கும் மேற்பட்ட லைக்குகளையும், பல வித கமெண்டுகளையும் பெற்றுள்ளது.

இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் (Netizens) இரு வகையான எதிர்வினைகளையும் அளித்துள்ளனர். சிலர் இதை புதுமையான முயற்சி என புகழ்ந்துள்ளனர்.

எனினும் சிலரோ, இப்படிப்பட்ட புதிய கலைவைகளால், பக்கோடா, பஜ்ஜி, போண்டா போன்ற நல்ல உணவுகளின் ருசியே கெட்டுப்போகிறது என ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

எது எப்படி இருந்தாலும், இந்த ஆப்பிள் பகோடா வீடியோ இணையத்தில் பட்டையைக் கிளப்பிக்கொண்டுதான் இருக்கிறது.

https://www.instagram.com/reel/CWn94NQDkTD/?utm_source=ig_web_copy_link

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories