அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: சேற்றுப்புண், காதுகுத்தல், தோல் அரிப்பு, காக்கா வலிப்பு, மூளைக்கோளாறு..!

Published:

health tips - 2026

சேற்றுப் புண்ணுக்கு…

கத்தைக் காம்பை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி அந்த எண்ணெயை புண் உள்ள இடங்களில் தடவி வர குணமாகும்.

காது குத்தலுக்கு…

பனை மரத்தின் பட்டையை நெருப்பில் போட்டு சுட்டு முறுக்கினால் அதிலிருந்து சாறு வரும். அந்த சாற்றினை இளஞ்சூட்டுடன் காதில் விட்டு பஞ்சைக் கொண்டு அடைக்க காது வலி உடனே நிற்கும்.

தோல் அரிப்புக்கு…

வசம்புத் தூளை கொதிநீரில் போட்டு ஒரு மணி நேரம் ஊற வைத்துப் பத்திரப்படுத்தி இந்தக் கஷாயத்தை அரை அவுன்ஸ் வீதம் மூன்று வேளை பருகி வர அரிப்பு குணமாகும்.

காக்காய் வலிப்பா?

தினமும் மூன்று வேளையும் திராட்சைப் பழச்சாறு மூன்று மாதங்கள் சாப்பிட்டு வர இந்நோய் சிறுகச் சிறுக குணமாகும்.

மூளைக் கோளாறுகளுக்கு…

தினமும் 10 பாதாம் பருப்பை இரவு நீரில் ஊற வைத்து காலையில் தோல் நீக்கி வெண்ணெய் போல் அரைத்து சம அளவு வெண்ணெய் சேர்த்து சாப்பிட மிகவும் நல்லது.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

Related articles

Recent articles

spot_img