February 24, 2026, 2:24 AM
25.9 C
Chennai

அடுக்கடுக்காய் இத்தனை பொய்கள்; ஆளுநர் வாசித்து அவைக் குறிப்பில் ஏற வேண்டுமா?: அம்பலப்படுத்திய அண்ணாமலை!

bjp annamalai - 2026
#image_title

பிப்.12ம் தேதி திங்கள் அன்று தமிழக சட்டமன்றம் கூடியது. ஆளுநர் உரையுடன் தொடங்க வேண்டிய சட்டமன்றத்தில், ஆளுநர் வாசிப்பதற்காக அரசு உரை தயாரித்துக் கொடுப்பது வழக்கம். அதில், தமிழக அரசின் சாதனைகள், கொள்கைகள், நடவடிக்கைகள், எடுக்கப்பட வேண்டிய தொலைநோக்குத் திட்டங்கள், அறிவிப்புகள் என இருத்தல் மரபு. அதனை ஆளுநர் அரசின் சார்பில் வாசித்தலும் மரபாக இருந்து வருகிறது. இதில் சில திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தால், முன்னதாகவே ஆளுநர், அரசுத் துறைக்கு தெரிவித்து, அதன்படி மேற்கொள்ளப்படுதலும் வழக்கமாக இருந்துவருகிறது.

முன்னதாக திமுக., அரசு அமைந்த பின்னர், ஆளுநர் ஜெய் ஹிந்த் சொன்னார் என்று ஒரு சர்ச்சையைக் கிளப்பியது. கடந்த வருடம் ஆளுநர் சில திருத்தங்களைச் சொல்லி, அதை மெற்கொள்ளாததால், ஆளுநர் தான் தயாரித்துக் கொண்டு வந்த சிற்சில திருத்தங்களுடனான உரையையே படித்தார். அதற்கு கண்டனத் தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிய, ஆளுநர் அவையை விட்டு உடனே வெளியேறினார்.

இந்த வருடம் அதனால் எத்தகைய சர்ச்சை ஏற்படும் என்று எதிர்பார்ப்பு பலருக்கும் இருந்த நிலையில், அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் உண்மைக்கு மாறான பல்வேறு விஷயங்கள் இருந்ததால் தாம் இதனை வாசிக்கப் போவதில்லை என்று கூறி அரசு தயாரித்துக் கொடுத்த உரையை வாசிக்காமலே அமர்ந்துவிட்டார் ஆளுநர். முக்கியமாக, மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி சட்டமாக அமல்படுத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று குறிப்பிட்டு, அதனை ஆளுநர் படிக்க நிர்பந்தித்தல் என்பதை ஆளுநர் எப்படி ஏற்பார்?

இந்நிலையில், அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் அடுக்கடுக்காக எத்தனை பொய்கள் நிரம்பியுள்ளன என்பது குறித்து பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். அந்த அறிக்கையில் அண்ணாமலை தெரிவித்திருக்கும் கருத்துகள்….

திமுக அரசு தயாரித்த ஆளுநர் உரையில் அடுக்கடுக்கான பொய்கள்

திமுக ஆட்சிக்கு வந்தபின், தாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது சட்டப்பேரவையில் இல்லாமல் வெளிநடப்பு செய்வதையே வாடிக்கையாக கொண்டு, பத்திரிகையாளர்களை சந்தித்து ஆளுநர் உரையை ஏன் புறக்கணித்தார்கள் என்று காரணம் சொன்னதை எல்லாம் தற்போது மறந்துவிட்டார்கள் போல் தெரிகிறது. ஆளுநர் உரையை புறக்கணிக்க அவர்கள் சொன்ன காரணங்களை உங்களுக்கு முதலில் நினைவூட்டிவிட்டு இந்த ஆண்டு ஆளுநர் உரையில் மிகுதியாக அடுக்கப்பட்ட பொய்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் கடமை தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு உள்ளது.

2018ஆம் ஆண்டு திரு முக ஸ்டாலின் நான் தொடக்கத்திலே சொன்னது மாதிரி இந்த ஆளுநர் உரை என்பது, மஸ்கோத் அல்வாவாக அமைந்துள்ளது.

2019ஆம் ஆண்டு திரு முக ஸ்டாலின் ஒரு அரசின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ஆளுநர் உரையை இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவது வெட்கக்கேடான செயல் எனவே அரசு எழுதி தந்திருக்க கூடிய Failure பேப்பர்களை கவர்னர் சட்டமன்றத்தில் இப்போது படித்துக்கொண்டிருக்கிறார் எனவே. நாங்கள் அதை கண்டித்து அவரது உரையை புறக்கணித்து, திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் வெளிநடப்பு செய்திருக்கிறோம்.

2020ஆம் ஆண்டு திரு முக ஸ்டாலின் ஆளுங்கட்சியால் தயாரிக்கப்பட்டுள்ள ஆளுநர் உரையை நாங்கள் புறக்கணிப்பதென்று முடிவெடுத்து அதை புறக்கணித்துவிட்டு வெளிநடப்பு செய்திருக்கிறோம்

2021ஆம் ஆண்டும் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தீர்கள் என்பதை திமுகவினர் தற்போது மறந்துவிட்டனர்.

இப்படி கடந்த காலங்களில் ஆளுநர் உரையை புறக்கணித்தும் விமர்சித்தும் வெளிநடப்பு செய்த திமுக, ஆட்சிக்கு வந்தபின் பொய்களை தொகுத்து வழங்கிய ஒரு உரையை ஆளுநர் கட்டாயமாக வாசிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது நகைமுரண்.

பொய் 1: நாட்டிலே அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் முதல் முகவரியாக தமிழகம் திகழ்கிறது. அதற்கு சான்று சமீபத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாடு.

உண்மை நிலவரம்: திமுக ஆட்சிக்கு வந்தபின் தமிழகத்தில் தொழில்முனைவோர் பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளதை பலமுறை தமிழக பாஜக முன்வைத்தும் அதற்கு எந்த தீர்வும் காணாமல், வசூலில் மட்டுமே குறியாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

சமீபத்தில் நாங்கள் முன்வைத்த SGST refund குற்றச்சாட்டாக இருக்கட்டும். மின்சார கட்டணம் மற்றும் Demand Charge உயர்த்தியதாக இருக்கட்டும். வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பும் நிலையாக இருக்கட்டும். திமுக ஆட்சிக்கு வந்தபின் அவர்களின் நடவடிக்கைகளால் முதலீடுகள் குறைந்து கொண்டே வருவது கண்கூடாக தெரிகிறது. கடந்த ஆண்டு உளுந்தூர்பேட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் 2000 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு ஒரு காலணிகள் தயாரிப்பு நிறுவனத்துடன் திமுக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது. அந்தபின் அந்த தொழிற்சாலை பணிகள் நடைபெறுவதாக எந்த செய்தியும் இல்லை. இவ்வாறே உள்ளது தமிழக அரசின் செயல்பாடு

உலக முதலீட்டாளர் மாநாட்டில் 6.6 லட்சம் கோடி ரூபாய் முதலீடு கொண்டுவந்துள்ளதாக பெருமைப்படுவதற்கு முன்பு நமது நாட்டில் முன்னணி மாநிலங்கள் இது போன்ற மூதலீட்டாளர் மாநாடுகளில் கொண்டு வந்த முதலீடுகள் எவ்வளவு என்பதாவது திமுகவுக்கு தெரியுமா ?

உத்தரபிரதேசம் 33 லட்சம் கோடி ரூபாய்
குஜராத் -26 லட்சம் கோடி ரூபாய்
கர்நாடகம் 10 லட்சம் கோடி ரூபாய்

இவ்வாறு இருக்கையில், முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னோடி மாநிலம் என்பது தவறான தகவல் என்பதை திமுக உணரவேண்டும்.

பொய் 2: சென்னை மற்றும் தென் தமிழகத்தில் பலத்த மழையால் அதிகளவில் வெள்ளம் ஏற்பட்டதால் இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகள் மற்றும் வாழ்வாதாரத்தை இழக்க நேரிட்டது. இயற்கை பேரிடர்களை திறம்படக் கையாண்ட இந்த அரசுக்கு எனது பாராட்டுக்கள்.

உண்மை நிலவரம்: சிங்கார சென்னையை sink ஆகுற சென்னையாக மாற்றியது திமுக. சமீபத்தில் பெய்த மழை திமுக அரசு சொன்ன பொய்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. நேர்மையான ஆட்சியாளராக இருந்திருந்தால் சொன்ன பொய்களுக்கும் செய்த தவறுகளுக்கும் திமுக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கவேண்டும்.

கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே 95% வடிகால் பணிகள் முடிவடைந்து விட்டதாகக் கூறியிருந்தனர் பத்து நாட்கள் மழை பெய்யாமல் இருந்தால் மழை நீர் வடிகால் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்துவிடும் என்றார் அமைச்சர் சேகர் பாபு அதன் பின் 99 சதவீத பணிகள் நிறைவுபெற்றதாக கூறிய செய்திகளும் உள்ளன

மழைக்கு முன்பு, 98 சதவீதம் வடிகால் பணிகள் நிறைவடைந்ததாகக் கூறிய அமைச்சர் திரு கே.என். நேரு சென்னை வெள்ளக்காடாக மாறியபின், 42 சதவீத மழைநீர் வடிகால் பணிகள் மட்டுமே நிறைவுபெற்றதாக கூறினார் 99 சதவீத பணிகள் நிறைவடைந்தது என்று சொன்ன நீங்கள் கடைசியில் மிகஜாம் புயலின்போது மக்களை தத்தளிக்கவிட்டது தான் மிச்சம்.

இது போதாது என்று தென் தமிழகத்தில் வெள்ளத்தால் மக்கள் தத்தளித்து கொண்டிருந்தபோது இந்தி கூட்டணி கூட்டத்திற்கு புதுதில்லி சென்றவர் தமிழக முதல்வர் திரு முக ஸ்டாலின் அவர்கள். இது தான் பேரிடரை திறம்பட கையாண்ட விதமா ? இப்படி மக்களை அவதிக்குள்ளாக்கிவிட்டு தமக்கு தாமே பாராட்டி கொள்ளும் மனம் திமுகவினருக்கே உரித்தான குணம்.

பொய் 3: சரக்கு மற்றும் சேவை வரி மூலமாக தமிழகத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 20,000 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

உண்மை: 2017-18ஆம் நிதியாண்டில் சரக்கு மற்றும் சேவை வரியை நமது மத்திய அரசு அறிமுகப்படுத்திய போது, மாநிலங்களின் வரிவருவாய் அதற்கு முந்தைய நிதியாண்டை ஒப்பிடும் போது 14 விழுக்காடு வளர்ச்சி காணவில்லையெனில் அந்த பற்றாக்குறையான வரிவருவாயை இழப்பீடு தொகையாக மத்திய ஆண்டுகளுக்கு வழங்கும் என்று தெரிவித்திருந்தது. அரசு 5

சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் தமிழகத்தின் சொந்த வரிவருவாயின் வளர்ச்சி சதவீதம்

2013-14: 3%
2014-15: 7%
2015-16: 2%
2016-17: 7%

சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்திய பின்னர் தமிழகத்தின் சொந்த வரிவருவாயின் வளர்ச்சி சதவீதம்

2018-19: 14%
2019-20: 10%
2020-21 -12% (கொரோனா காலகட்டம்)
2021-22 16%
2022-23: 24%

2017ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை சுமார் 27,959 கோடி ரூபாய் GST இழப்பீடு தொகையாக கொடுத்தது மட்டுமல்லாது கொரோனா காலகட்டத்தில் நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க 14,336 கோடி ரூபாய் கடன் உதவியும் வழங்கியது நமது மத்திய அரசு

சரக்கு மற்றும் சேவை வரியால் ஒரே ஆண்டில் 20,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு எவ்வாறு ஏற்பட்டுள்ளது என்பதை திமுக அரசு தமிழக மக்களுக்கு தெரளிவுபடுத்தவேண்டும். இல்லையெனில் ஆளுநர் உரையில் இது போன்ற பொய்களை சேர்த்ததற்கு மன்னிப்பு கேட்கவேண்டும்.

பொய் 4: சட்டம் ஒழுங்கு பராமரிப்பு மற்றும் மத நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு மாநில அரசு முன்னுரிமை வழங்குகிறது.

உண்மை: சட்டம் ஒழுங்கு எவ்வாறு உள்ளது என்பதை தாங்கள் தங்கியிருக்கும் மாளிகையில் இருந்து இறங்கி வந்து பொதுமக்களிடம் கேட்டால் தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு உண்மை நிலை புரியும்.

கோவை தற்கொலைப்படை தாக்குதலை சிலிண்டர் வெடிப்பு என்று சொன்னவர்களுக்கு சட்டம் ஒழுங்கின் மீது எவ்வளவு அக்கறை இருக்கும் என்பது தெளிவாக புரிகிறது. ஆட்சிக்கு வந்தபின் தமிழகத்தை கஞ்சா தலைநகரமாக மாற்றியதை தவிர என்ன சாதனை செய்தது திமுக கள்ளக்குறிச்சியில் நடந்த கலவரத்தின் போது அமைச்சர் உட்பட அனைவரும் திரைக்கு பின்னால் மறைந்துகொண்டு வேடிக்கை மட்டும்தானே பார்த்தீர்கள்

சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று தமிழகத்தின் விளையாட்டு அமைச்சர் திரு உதயநிதி பேசிய பின்பும் மத நல்லிணக்கத்தை பற்றி பேச திமுக அரசுக்கு என்ன தகுதி இருக்கிறது ?

பொய் 5% மகளிர் உரிமை திட்டத்தை செயல்படுத்தி தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டோம்.

உண்மை அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை என்று தேர்தல் வாக்குறுதி வழங்கி விட்டு சுமார் 1.2 கோடி குடும்ப அட்டை வைத்திருக்கும் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்காமல் ஏமாற்றியதில் என்ன பெருமை உள்ளது ?

இப்படி கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் கட்சி மேடைகளில் மட்டும் 99 சதவீத தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டோம் என்று கூசாமல் பொய் சொல்லும் முதல்வர் மு.க ஸ்டாலின் அதை ஆளுநர் உரையில் சேர்க்காமல் விட்டது உள்ளபடியே மகிழ்ச்சி.

பொய் 6: புதுமைப் பெண் திட்டம் மூலமாக 273 லட்சம் பெண்கள் பயனடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மை: தமிழகத்தில், இதற்கு முந்தைய ஆட்சியின் போது நடைமுறையில் இருந்த தாலிக்குத் தங்கம் திட்டத்தை நிறுத்தி விட்டு, அதற்குப் பதிலாக புதுமைப் பெண் என்ற திட்டத்தை திமுக அரசு அறிமுகப்படுத்தியது அனைவரும் அறிந்ததே.

முந்தைய திட்டத்தை நிறுத்திவிட்டு புதிய திட்டம் அறிமுகப்படுத்த என்ன காரணம் என்று 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் சட்டப்பேரவையில் விவாதம் நடந்தபோது, புதுமை பெண் திட்டம் மூலமாக வருடத்திற்கு 6 லட்சம் மாணவிகள் பயனடைவர் என்று தெரிவித்தார் தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின்

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த திட்டத்தில் பயனடைந்த மாணவிகளின் எண்ணிக்கை, 2 லட்சத்து 11 ஆயிரத்து 506 என்று சமீபத்தில் நடந்த திமுக இளைஞர் அணி மாநாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், 2 வாரங்களுக்கு பின்னர் அந்த எண்ணிக்கை 2 லட்சத்து 73 ஆயிரமாக உயர்ந்துவிட்டது. இப்படி உண்மைக்கு புறம்பான தகவலை ஆளுநர் உரையில் கொடுத்தது தவறு

அது ஒரு புறம் இருக்க. முந்தைய திட்டத்தை கைவிட தமிழக முதல்வர் சொன்ன உத்தேச பயனாளிகளில் சரிபாதியை கூட நிறைவேற்றாதது எப்படி சாதனை ஆகும்?

பொய் 7 முதல்வரின் காலை உணவு திட்டம். நாட்டின் முதன்மை மாநிலம்

உண்மை பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு மட்டுமல்லாது காலை உணவும் போஷன் திட்டத்தில் வழங்க வேண்டும் என்று 2020 ஆம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. 2020 முதல் 2022 ஆம் ஆண்டு வரையில் போஷன் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட நிதி 1,146 கோடி ரூபாய்.

இந்தியாவில் பல மாநில அரசுகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களோடு இணைந்து காலை மற்றும் மதிய உணவு திட்டத்தை பல ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறார்கள் என்பதை தமிழக முதல்வர் புரிந்துக் கொள்ளவேண்டும். மத்திய அரசு நேரடியாக இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு இலவச அரிசியும், ஒரு வேளை உணவிற்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் வழங்கி வருவது அந்த தொண்டு நிறுவனங்களின் வாயிலாக அறியமுடிகிறது. மேலும் கர்நாடகம், ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செயல்பாட்டில் உள்ளதையும் அறிய முடிகிறது.

பொய் 8: ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான தமிழ்நாடு மேம்பாட்டுச் செயல் திட்டம் 2024 எனும் சட்ட முன்வடிவை நடப்புக் கூட்டத் தொடரின் போது அரசு அறிமுகப்படுத்த உள்ளது.

உண்மை கடந்த ஆண்டு பட்டியல் சமுதாய மக்களுக்கு நமது மத்திய அரசு வழங்கிய சுமார் 10,000 கோடி ரூபாய் நிதியை செலவிடாமல் வீணாக்கியதை தமிழக பாரதிய ஜனதா கட்சி கண்டித்தது. அதன் பின்னர் பட்டியல் சமுதாய மக்களுக்கு SCSP மூலமாக வரும் நிதியை சரியாக செலவிட ஒரு சட்டமுன்வரைவு அறிமுகப்படுத்தப்படும் என்று திமுக அரசு சொல்லி சுமார் ஒரு ஆண்டு கடந்துவிட்டது.

இனியும் திமுகவின் பொய் வாக்குறுதிகளை மக்கள் நம்ப தயாராக இல்லை திமுக தற்போது தெரிவித்துள்ள செயல் திட்டம் தடையின்றி செயல்படும் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு இல்லை.

பொய் 9. சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பை நடத்துமாறு மத்திய அரசை வலியுறுத்துவோம்

உண்மை கடந்த ஆட்சியில் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க குலசேகரன் குழுவை தமிழக அரசு அமைத்தது ஆட்சிமாற்றத்திற்கு பிறகு, அறிக்கை சமர்ப்பிக்க எங்களுக்கு 6 மாதம் கால நீட்டிப்பு வேண்டும் என்று குலசேகரன் கமிஷன் விடுத்த கோரிக்கையை திமுக அரசு நிராகரித்தது இவ்வாறு இருக்கையில் மத்திய அரசிடம் இது தொடர்பாக எதற்கு வலியுறுத்துகிறீர்கள் என்பதே எங்கள் கேள்வி

பொய் 10: தமிழக அரசின் இன்னுயிர் காப்போம் திட்டம் நாட்டின் முன்னோடி திட்டம்

உண்மை. விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மருத்துவமனையில் கொண்டு சேர்ப்பவர்களை சிறந்த குடிமகன் என்று அங்கீகரித்து, அவர்களுக்கு 5,000 ரூபாய் வழங்கப்படும் என்று நமது மத்திய அரசின் நெடுஞ்சாலைத்துறை 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிவித்தது. இந்த திட்டத்திற்கு திமுக அரசு சூட்டிய பெயர் இன்னுயிர் காப்போம்.

மேலும், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வழங்கும் கடன்கள் மீதும் திமுக ஆளுநர் உரையில் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது. விவசாயிகளின் நலன் காக்க பல முன்னோடி திட்டங்களை இந்த அரசு நடைமுறைபடுத்தியதாக தெரிவிக்கப்பட்டபோது, திருவண்ணாமலை விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டாஸ் வழக்கும், தமிழக அரசின் முயற்சியால் 2023ஆம் ஆண்டு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 243 மீனவர்களில் 242 மீனவர்கள் விடுவிக்கப்பட்டதாக சொன்ன போது மத்தியில் திமுக காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 80க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதும் தான் நினைவுக்கு வந்தது.

திமுக அரசு தயாரித்த ஆளுநர் உரையில் ஒரே ஒரு குறை தான். கிளம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தின் சாதனை இந்த ஆளுநர் உரையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. அது இடம் பெறாமல் போனது உள்ளபடியே மிகப்பெரிய ஏமாற்றம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Entertainment News

Popular Categories