துக்ளக் சோ சார் பிறந்த தினம் இன்று….. சோ.
ரோல் மாடல் என்று இருந்த ஒரே எழுத்து.
கருத்தில் நிலைப்பாடுடைமை என்பது முழுமையாக இருந்த ஒரே எழுத்து.
நடு நிலை என்பது இரு கருத்துக்கும் நடுவில் இருப்பது அல்ல என்பதைப் புரியவைத்த ஒரே எழுத்து.
அரசியல் என்றால் கடவுளைத் திட்டுவது அல்ல என்று உணர்த்திய ஒரே எழுத்து.
அடுக்கு மொழியில் எழுதுவது மட்டும் தமிழ் அல்ல என்று உணர்த்திய ஒரே எழுத்து.
எந்த பிர்ச்னைக்கும் முழங்கால் – அதிர்வு தீர்வு உதவாது என்று உணர்த்திய ஒரே எழுத்து.
கருத்து சுதந்திரம் என்பது பொறுப்புகளிலிருந்து விடுதலை என்பதல்ல என்று நடந்துகாட்டிய ஒரே எழுத்து.
இன்வெஸ்டிகேட்டிங் ஜர்னலிஸம் என்பது ரகசியக் காமிரா வைத்து படுக்கையறை நிகழ்ச்சிகளைப் படமெடுத்தல் அல்ல என்று உணர்த்திய ஒரே எழுத்து.
முதுகெலும்பு என்பது என்ன என்று எமர்ஜென்ஸியின் போது உணர்த்திய ஒரே எழுத்து.
பிரேதத்தின் பொம்மலாட்டம் என்று கம்யூனிஸத்தை தோலுரித்து எடுத்துச்சொன்ன ஒரே எழுத்து.
மகாபாரதம் காவியமல்ல சரித்திரம் என்று புரியவைத்த ஒரே எழுத்து.
பேட்டி எடுப்பது , எடுக்கப்படுபவரின் கருத்தைச் சொல்வதற்கு மட்டுமே, எடுப்பவரின் அறிவைக் காட்டுவதற்கு அல்ல என்று புரிய வைத்த ஒரே எழுத்து.




