health tips - 2026

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: வீக்கம், செம்பட்டை முடி, நெறிக்கட்டிக் கொள்ளுதல்..!

லைஃப் ஸ்டைல் நலவாழ்வு
health tips - 2026

வீக்கத்திற்கு…

செம்மண்ணை தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்து சுட வைத்து பொறுக்குமளவு சூட்டோடு இரவில் பற்றுப் போட காலையில் வடிந்து விடும். யானைக்கால் வீக்கத்திற்கு இது பொருந்தாது. கடையில் விற்கும் காவியை பயன்படுத்தக் கூடாது.

துளசி தீர்த்தம்

துளசியை சுத்தம் செய்து செப்பு பாத்திரத்திவிட்டு தண்ணீர் விட்டு ஐந்தாறு மணி நேரம் ஊறவைத்து துளசியை எடுத்து விட்டு அந்தத் தண்ணீரை மட்டும் சாப்பிட்டு வர எந்த வியாதியும் வராது.

வேப்பங்கள்ளின் மகத்துவம்

மிகவும் வயது முதிர்ந்த மரத்திலிருந்து பால் போன்ற வேப்பங் கள் ஒழுகும். இதைக் குடிக்க தாது விருத்தியாகும். குஷ்டத்தையும் போக்கும்.

நெறி கட்டிக் கொண்டதா?

முட்காவேளை வேர் ஒரு பங்கும் மஞ்சள் கால் பங்கும் சேர்த்து ஊற வைத்தெடுத்து பசும்பால் விட்டரைத்து நெறி கட்டிக் கொண்டுள்ள இடத்தில் பூசிவிட்டால் காய்ந்த பின்பு வீக்கமும் வலியும் தானே குறையும்.

செம்பட்டை முடி கறுப்பாக…

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

கரிசலாங்கண்ணி சாறு 100 மி.வி. கடுக்காய் ஊறிய நீர் 100 மி.லி. தேங்காய் எண்ணெய் 200 மி.லி மூன்றையும் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி இறக்கும் தருவாயில் 50 கி கோஷ்டம் தூள் சேர்த்து இறக்கி, இத்தைலத்தை தொடர்ந்து தலைக்குத் தேய்த்து வர செம்பட்டை முடி கறுப்பாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.