Cashew Biryani - 2026

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: முந்திரி பிரியாணி!

லைஃப் ஸ்டைல் சமையல் புதிது
Cashew Biryani - 2026

முந்திரி பிரியாணி
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி – 1/2கிலோ
பெ.வெங்காயம் – 3
முந்திரி – 100கிராம்
கரம் மசாலா தூள்- 1ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது – 1ஸ்பூன்
தயிர் – 1/2 கப்
ப.மிளகாய் – 10(காரம் அதிகம் வேண்டுமென்றால் கூட்டிக்கொள்ளவும்)
எலுமிச்சை சாறு – 1ஸ்பூன்
கிராம்பு – 4
பட்டை – 1
ஏலக்காய் – 4
உப்பு – தேவைக்கு
நெய் – 200கிராம்

செய்முறை
வாணலியில் கொஞ்சம் நெய் காயவைத்து மெலிதாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.
மீதி நெயில் முந்திரியை வறுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதனுடன் சிறிது பட்டை, எலக்காய், கிராம்பு, உப்பு சேர்த்து கொதிவரும் சமையம் அரிசியை போடவும்.
அரிசி வெந்த பின்பு வடிகட்டி தனியாக வைக்கவும்.
வாணலியில் நெய் ஊற்றி காய்ந்த பின்பு பட்டை, கிராம்பு, ஏலக்காய், இஞ்சி பூண்டு விழுது, தயிர், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும் .
வதங்கிய பிறகு முந்திரி சேர்க்கவும்.
இதன் மேலே வேக வைத்த சாதம் போடவும்.
இதன் மேலே வறுத்த வெங்காயத்தை சுற்றி வரை தூவவும்.
5 நிமிடன் அடுப்பில் வைத்து இறக்கவும்
எலுமிச்சைசாறு ஊற்றி சூடாக பறிமாறவும். முந்திரி வறுக்கும் போது நிறம்மாறாமல் வறுத்தேடுக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.