health tips - 2026

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: தோல் வியாதி, சர்க்கரை வியாதி, மூலம், வாயு, தோல் தடிப்பு..!

லைஃப் ஸ்டைல் நலவாழ்வு
health tips - 2026

மூல வியாதியா?

காரமான பொருளை சாப்பிடக் கூடாது. அத்திப்பிஞ்சு, வாழைப் பிஞ்சு, வாழைப்பூ, கருணைக்கிழங்கு, முள்ளங்கியின் கீரை, புளியாரைக் கீரை முதலியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வர மூல உபத்திரவம் குறையும்.

தோல் வியாதியா?

சொறி, சிரங்கு, படை. அரிப்பு இருந்தால் இலுப்பை இலைகளை அரைத்து உடம்பு முழுவதும் தேய்த்து கொண்டு ஊறிக் குளிக்க குணமாகும்.

வயிற்றில் வாயு சேர்ந்து விட்டதா?

நச்சுக் கொட்டிக் கீரை (சிலர் இதை கெட்ட கீரை என்பார்கள்)யை சமைத்து சாப்பிட வயிற்றிலுள்ள வாயு வெளியேறும். இக்கீரையில் கால்சியச் சத்து நிறைய இருக்கிறது.

தோல் தடிப்பு ஏற்படுகிறதா?

அலர்ஜியால் தோலில் ஆங்காங்கு தடிப்பு ஏற்பட்டால் இளஞ்சூடான ஒரு பக்கெட் வெந்நீரில் ஒரு கைப்பிடியளவு சோடாவைக் கரைத்து அதில் குளிக்க தடிப்பெல்லாம் மறைந்தே போய்விடும்.

ஆரம்ப நிலையில் உள்ள சர்க்கரை வியாதிக்கு…

மிதிபாகற்காயை உள்ளிருக்கும் விதையை நீக்கி காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி நிழலில் நன்கு உலர்த்திக் கொள்ளவும். நாவல் கொட்டைகளை உடைத்து நிழலில் உலர்த்திக் கொள்ளவும். உலர்ந்த நாவல் கொட்டை இருமடங்கு, உலர்ந்த மிதிபாகல் ஒரு மடங்கு சேர்த்து நன்றாக அரைத்து தினமும் காலையில் மோரில் இப் பொடியைச் சேர்த்து தினமும் சாப்பிட்டு வர குணமாகும். உணவில் கோதுமை, கேழ்வரகு அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.