நதிநீர் பிரச்னை: சிக்கலை உருவாக்குவதே கேரளத்தின் வாடிக்கை!

தமிழகம், கேரளம் இடையேயான பரம்பிக்குளம் – ஆழியாறு நீர்ப் பகிர்வு உடன்படிக்கையை மறுஆய்வுக்கு உட்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளா அரசு தமிழகத்தோடு அனைத்து நதிநீர் ஆதாரங்களின் சிக்கல்களில் பிரச்சனைகளை உருவாக்குவதே வாடிக்கை ஆகிவிட்டது.

சென்னையில் அடுத்த மாதம் 10-ஆம் தேதி நடைபெறவுள்ள அரசுத் துறைச் செயலர்கள் கூட்டத்தில் இதுகுறித்து வலியுறுத்தப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக கேரள சட்டப் பேரவையில் கடந்த 24/01/2017 அன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பினராயி விஜயன் அளித்த பதில் வருமாறு.

இரு மாநிலங்களுக்கும் இடையே கடந்த 1988-ஆம் ஆண்டு பரம்பிக்குளம் – ஆழியாறு நீர்ப் பகிர்வு உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, ஆண்டொன்றுக்கு 7.25 டிஎம்சி தண்ணீரை கேரளத்துக்கு தமிழகம் வழங்க வேண்டும். அந்தப் பாசன நீரை நம்பியே சித்தூர் விவசாயிகள் வேளாண்மை செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை முதல் இதுவரை 4.275 டிஎம்சி தண்ணீரை மட்டுமே தமிழகம் வழங்கியுள்ளது. இதன் காரணமாக வரும் ஜூன் மாதத்துக்குள் மீதமுள்ள நீரைக் கேட்டுப் பெற வேண்டிய அவசியம் கேரளத்துக்கு எழுந்துள்ளது.

ALSO READ:  ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

நிகழாண்டில் போதிய நீர்வரத்து தமிழகத்திலிருந்து கிடைக்காததால் சித்தூர் பாசன விவசாயிகள் கடும் வறட்சியை எதிர்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக தொடர் பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக தற்போது விநாடிக்கு 400 கன அடி நீரைத் திறந்து விடுவதாக தமிழக அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

பரம்பிக்குளம் – ஆழியார் நீர்ப் பகிர்வு உடன்படிக்கை ஏறத்தாழ 30 ஆண்டு காலம் பழமையானது. எனவே, அதனை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. இதுகுறித்து தமிழகத்துடன் பல்வேறு தருணங்களில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், அதில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.

நதி நீர்ப் பகிர்வு நடவடிக்கைகளை மறு பரிசீலனை செய்வது இரு மாநிலங்களுக்கும் நன்மை பயக்கக் கூடியது. சென்னையில் நடைபெறவுள்ள அரசுத் துறைச் செயலர்கள் கூட்டத்தில் இந்த விவகாரத்தை எழுப்பத் திட்டமிட்டுள்ளோம். பரம்பிக்குளம் – ஆழியாறில் இருந்து அதிக அளவு நீரைப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் கேரள அரசு முன்னெடுக்கும் என்றார் பினராயி விஜயன்.

#ஆழியாறுபரம்பிக்குளம்
#தமிழககேரளநதிநீர்
பிரச்சனைகள்
#P_A_P_Project
#TN_Kerala_river_water_issues

ALSO READ:  தாயை வணங்கினால் தறுதலைகளுக்கு ஆத்திரமா?

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Entertainment News

Popular Categories