ஒப்போ ஏ36: சிறப்பம்சங்கள்..!

Published:

Oppo A36 - 2026

ஒப்போ நிறுவனம் புதிய ஒப்போ ஏ36 ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் தனித்துவமான சிப்செட் மற்றும் அசத்தலான கேமரா அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

விரைவில் இந்த சாதனம் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ஒப்போ ஏ36 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவலை விரிவாகப் பார்ப்போம்.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ36 ஸ்மார்ட்போன் மாடலின் விலை 1,599 Yuan (இந்திய மதிப்பில் ரூ.23,500) ஆக உள்ளது. அதேபோல் Cloudy Black மற்றும் Qingchuan Blue நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒப்போ ஏ36 ஸ்மார்ட்போன் மாடல் 6.56-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1612 x 720 பிக்சல் தீர்மானம்,180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

குறிப்பாக இந்த சாதனம் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

இந்த ஒப்போ ஏ36 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதி உள்ளது. மேலும் அட்ரினோ 610ஜிபியு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் ColorOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

Oppo A36 1 - 2026

ஒப்போ ஏ36 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும் செல்பீகளுக்கும், கால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

புதிய ஒப்போ ஏ36 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்

ஒப்போ ஏ36 ஸ்மார்ட்போனில் இரட்டை சிம், 4ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், பெய்டூ, க்ளோனாஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளன. பின்பு இந்த சாதனத்தின் எடை 185 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

Related articles

Recent articles

spot_img