தேனீக்கள் போல் எப்போதும் சுறுசுறுப்பாக செயல் படுவோம்..

Published:

உலகம் முழுவதும் இன்று மே20 இல் உலக தேனீக்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

சுறுச்சுறுப்புக்கு உதாரணமாக சொல்லப்படும் தேனீக்கள் இயற்கையை சமநிலையாக வைத்துக்கொள்வதிலும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. தேனீக்கள் பெருங்கூட்டமாக வாழ்கின்றன. தேனீக்கள் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் ஆற்றல் பெற்றதாகும்.
ஒரு பவுண்டு தேன் சேகரிக்க தேனீக்கள் இருபது லட்சம் பூக்களிலிருந்து தேனை சேகரிக்க வேண்டும்.சிறுபூச்சி இனத்தைச் சேர்ந்த இந்த தேனீக்கள் ஆண்டுக்கு 1 லட்சம் கி.மீ தூரம் பயணம் செய்து தன்னுடைய உணவுத் தேவைக்காக பூக்களில் இருந்து அவை தேனை எடுக்கின்றன.ஒரு பவுண்டு தேன் தயாரிக்க ஒரு தேனீ சுமார் 14 லட்சம் கிலோ மீட்டர் பறக்க வேண்டும். அதாவது உலகம் முழுவதும் மூன்று முறை சுற்றுவதற்கு சமம்.
தேனீக்களின் மூளை ஓவல் வடிவத்தில் எள் விதையின் அளவில் இருக்கும். ஆனால் இந்த சிறு மூளை அது செல்லும் இடங்களில் உள்ள எல்லா விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும் நினைவில் வைத்து கொள்வதற்கும் ஏற்ற திறனைக் கொண்டுள்ளது.

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!

தேனீக்கள் ஒருவித நடன அசைவு மூலம் ஒன்றுக்கொன்று தகவல்களை பரிமாறிக்கொள்கிறது.ஆண்டுக்கு 1 லட்சம் கி.மீ தூரம் பயணித்து தன்னுடைய உணவுத் தேவைக்காக தேனீ பூக்களில் இருந்து தேனை எடுக்கிறது என்றாலும், அதன் மூலம் அதிகம் பயனடைவது என்னவோ மனிதகுலம்தான். தேன் மூலம், ஒவ்வொரு நாடும், பல கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் ஈட்ட உதவுவதோடு, அது மருத்துவ பொருளாகவும் திகழ்கிறது. தேனீக்கள் சுற்றுச்சூழலுக்கு மட்டுமன்றி மனித வாழ்க்கைக்கும் பேருதவியாக இருக்கிறது. குறிப்பாக விவசயிகளுக்கு இவை செய்யும் உதவி அளப்பரியது. தேனீக்களின் வாழ்க்கை முடிகிறதெனில் மனிதர்களுக்கான அழிவும் காத்துக்கொண்டிருக்கிறது என்பதை மறவாதீர்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
தேனீக்கள் உற்பத்தி செய்யும் தேனானது பல விதங்களில் சித்த மருத்துவத்தில் மருந்தாகவும் மனிதர்களுக்கு பல வகையிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தேனில் உள்ள இயற்கையான இனிப்பு சுவை, பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை உடலுக்கு எளிதில் ஜீரண சக்தியை கொடுக்கிறது. இதனால்தான் விளையாட்டு வீரர்கள் மற்றும் அத்தலெட்ஸ் இயற்கையான ஆற்றல் ஊக்கத்தை பெற தேனை பயன்படுத்துகிறார்கள்.

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

சுமார் 150 மில்லியன் ஆண்டுகளாக தேனீக்கள் தேனை உற்பத்தி செய்ய ஒரே வழியை தான் பயன்படுத்துகின்றன.தேன் குறைப்பாடு வரும் போது ஆண் தேனீக்களை வேலைக்கார தேனீக்கள் விரட்டி விடுமாம். மீண்டும் ஆண் தேனீக்கள் தேவைப்பட்டால் ராணி தேனீ உருவாக்கி கொள்ளுமாம்.ஒவ்வொரு ஆண்டும் மே 20 அன்று அழிந்து வரும் தேனீக்களை பாதுகாக்க உலக தேனீக்கள் தினம் கொண்டாடப்படுகிறது. தேனீக்கள் பெருக்கத்துக்கு வழிசெய்வோம்.தேனீக்கள் போல் எப்போதும் சுறுசுறுப்பாக செயல் படுவோம்.

images 2022 05 20T142238.826 - 2026
images 2022 05 20T141117.653 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img