whatsapp - 2026

வாட்ஸ்அப்: உங்கள் முகப் பதிவில் ஸ்டிக்கர்..!

லைஃப் ஸ்டைல் அடடே... அப்படியா? தொழில்நுட்பம்
whatsapp - 2026

வாட்ஸ்அப் இன்று தவிர்க்க முடியாத தகவல் பரிமாற்ற செயலியாக திகழ்கிறது. வாட்ஸ்அப்பில் பல பல புது வசதிகளும் வந்த வண்ணம் இருக்கின்றன.

பல்வேறு எமோஜிக்கள் இருக்கின்ற போதிலும், நம்முடைய புகைப்படத்தையே வாட்ஸ்அப்பில் வைத்துக் கொள்ளும் புதிய வசதியையும் வாட்ஸ்அப் கொண்டு வந்துள்ளது.

எனினும், இதை நீங்கள் மொபைலில் செய்ய முடியாது. லேப்டாப் அல்லது டெஸ்க்டாப்பில் வெப் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி மட்டுமே செய்ய முடியும். சில செயலிகளைப் பயன்படுத்தி நீங்கள் இதை செய்ய முடியும் என்றாலும், வாட்ஸ்அப்பே இத்தகைய வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

emoji 1 - 2026

வாஸ்ட்ஸ்அப்வெப்பில் சென்று சாட் விண்டோவுக்கு போகவும். அடுத்து, ஸ்டிக்கர் என்பதை தேர்வு செய்யவும். இப்போது நீங்கள் ஃபோல்டருக்கு செல்வீர்கள்.

அங்கிருந்து உங்கள் போட்டோவை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு போட்டோவை தேவைக்கேற்ப சரிசெய்து சென்ட் என்பதை தட்ட வேண்டியதுதான்.

நீங்கள் இதை சேமித்து வைத்துக் கொள்ளவும் முடியும். நீங்கள் சேமித்து வைத்த பிறகு, உங்களுக்கு எப்போது தேவையோ அப்போது இந்த ஸ்டிக்கரை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.