
வரும் 2024 ஆண்டு இந்த உலகிற்கு மிக மிக முக்கியமான ஓர் ஆண்டு. உலக அரசியலிலும் சரி… வல்லரசு அரசாங்கங்களும் சரி.. மாற்றம் காணுமா எனப் பலரும் பல்வேறு ஆரூடங்களை … ஆராய்ச்சிகளை … அள்ளித் தெளித்து கோலம் போட்டு கொண்டு இருக்கிறார்கள்.
அமெரிக்காவில் வரும் 2024 ஆம் ஆண்டு அங்கு பொதுத் தேர்தல் நடக்க இருக்கிறது…. அதில் தற்போது உள்ள பைடன் அரசாங்கத்திற்கு செல்வாக்கு இல்லை.., ஆதலால் வேறொருவரை முன்னிலை படுத்த திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார்கள் அங்கு. விட்டேனா பார் என இவர் சார்ந்த அரசியல் வாதிகளும் ஒரு பக்கமாக ஆலாபனை பாடிக் கொண்டு இருக்கிறார்கள்.
இது ஒரு புறம் இருக்க இந்திய வம்சாவளி பெண்மணி ஒருவரை களம் இறக்கவும் சகுனம் பார்த்துக் கொண்டு இருப்பதாகவும் கேள்வி….(கமலா ஹாரிஸ் அல்ல…)
அதேபோல் ரஷ்யாவில் விளாடிமிர் புடினின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு முடிவடைய இருக்கிறது. அவரே மீண்டும் பதவியில் தொடர ஏகப்பட்ட சட்ட திருத்தங்களை செய்ய வேண்டி இருக்கிறது. ஏனெனில் ஏற்கனவே அவர் ரஷ்ய அதிபராக…, ரஷ்ய பிரதமராக என மாறி மாறி பதவி வகித்து வந்துள்ளார்.சரியாகச் சொல்வதென்றால் இரண்டு முறை அதிபர்… இரண்டு முறை பிரதமர் என தற்போது உள்ள சட்ட ரீதியான முழு பதவி காலங்களை முழுமையாக முடித்து விட்டார். ஆனாலும் அங்கு அவரை தவிர வேறோர் தற்போதைக்கு அந்த பதவிக்கு வர முயற்சிக்கவில்லை….. அல்லது இவர் விடவில்லை. இனியும் விடப்போவதில்லை.
அடுத்ததாக சீனாவில் தற்போது உள்ள ஜிங் பிங்கே தொடர இருக்கிறார், கடந்த ஆண்டு தான் பல தகிடு தத்தத்தங்களை தேர்ந்தெடுக்கப்பட்டுயிருக்கிறார். ஐந்து ஆண்டு பதவிக்காலம் அது. அவருடைய நீண்ட கால உறுத்தல் தைவான். அங்கும் அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க வேண்டி இருக்கிறது. தற்போது உள்ள அதிபர் சாய்-யிங்-வென்னுக்கும் இவருக்கு எப்போதும் ஏழாம் பொருத்தம் தான். எப்படியாவது இவரை மாற்றிவிட்டு ஒரு தலையாட்டி பொம்மையை அங்கு கொண்டு வந்து விட வேண்டும் என தீரா வெறி ஜிங் பிங்கிற்கு உண்டு. எப்படி மாலத்தீவில் நடந்த தேர்தலில் ஒரு கைப்புள்ளையை அதிபராக கொண்டு வந்து இந்தியாவிற்கு குடைச்சல் கொடுக்க ஆய்தமாகி வருகிறாரோ அது போலவே தைவானிலும் ஒரு கரகாட்டம் ஆடிக் காட்ட காத்துக் கொண்டு இருக்கிறது பெய்ஜிங்.
இதனை தடுக்க ஆனானப்பட்ட அமெரிக்காவே தலைகீழாக நின்று தண்ணீர் குடித்து கொண்டு இருக்கிறது. இதில் பெய்ஜிங்கின் சண்டித்தனம் வெல்லும் என உலக அரசியல் பார்வையாளர்கள் இப்போதே ஆரூடம் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் தான் நமக்கு… நம் இந்திய தேசத்திற்கு அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் வர இருக்கிறது.
உலகமே கொண்டாடும் உலகத் தலைவர் தர வரிசை பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கும் … நம் பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடியை எப்படியாவது வெல்ல வேண்டும்…. அவரை தவிர வேறு யாரையாவது அந்த பதவியில் அமர்ந்த வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு மேற்கு உலக அரசியல்வியாதிகள் வேலை பார்த்து வர… இங்கு உள்ள சில அரசியல் கோமாளிகளும் அதற்கு துணை போக ஆர்வம் காட்டி வருகின்றார்கள். இன்றுள்ள சூழ்நிலையில் இவரை தவிர வேறு யார் வந்தாலும் உலகின் அரசியலின் போக்கே மாறிவிடும் என்கிற நிலையே நிலவுகிறது. அதுவே இவரது ஆளும் திறனுக்கு சாட்சி சொல்கிறது. தவிர நம் இந்திய நாட்டின் பொருளாதாரத்தின் அஸ்திவாரமே ஆட்டம் காணும்… ஆட்டிப் படைக்க ஓர் அரக்க கூட்டமே காத்துக் கொண்டு இருக்கிறது என்கிறார்கள்.
சீரழிந்த கலாச்சார சூழலில் சிக்கி மேற்கு உலக பொருளாதாரமே ஆட்டம் கண்டு வரும் நிலையில் சீரான இந்திய பொருளாதார வளர்ச்சி அவர்களை பொரும செய்திருக்கிறது. பல ஐரோப்பிய தேசங்களில் இஃது வெளிப்படையாக தெரிகிறது என்கிறார்கள்.ஏகாதிபத்திய எகத்தாளம் பேசிய பிரிட்டன் இன்று மூன்று துண்டுகளாக உடையும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. போதாக்குறைக்கு அங்கு இன்று அந்த தேசத்தை இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனாக் ஆள்வதை அவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. பல்லை கடித்து கறுவிக்கொண்டு இருக்கிறார்கள்….. அவ்வப்போது கருத்துக்களை சொல்லவும் தவறுவதேயில்லை. அவர்கள் நம்மை சுரண்டி விட்டு சென்ற 75 ஆண்டிகளில் நாம் இதனை சாதித்திருக்கிறோம்.
உலக அளவிளான பொருளாதார பங்களிப்பில் நம் தேசம் சீனாவிற்கு அடுத்தபடியாக சுமார் 22% எனும் அளவில் இருந்ததாக ஓர் மதிப்பாய்வு சொல்கிறது… இஃது 18 ஆம் நூற்றாண்டின் முந்தைய கணக்கு. இன்று ஒற்றை இலக்க எண்ணை… கிட்டத்தட்ட 3.7% மாத்திரமே கொண்டு இருக்கிறோம் என்கிறார்கள்.
ஒரு வேளை இஃது முந்தைய காலகட்டத்தை போல் இரட்டை இலக்க எண்களில் இருந்தால்….. குறைந்த பட்சம் 15% என்று ஆனால்…. நம் இந்திய தேசம் மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சி காணுமே என மலைக்கிறார்கள் பலரும்.
ஆனானப்பட்ட அமெரிக்காவே இன்று உள்ள நிலையில் முதல் இடத்தில் இருந்தாலும்…… அது அப்படி காட்டிட கட்டமைக்கப்பட்டுள்ளதே தவிர நிஜத்தில் அதன் நிதி நிலைமை வேறு என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்…… ஆனால் சீனாவில் அப்படி அல்ல. சீரான வளர்ச்சி கண்டு அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டே இருக்கிறது. அவர்களை கட்டி ஆள ….. தட்டி வைக்க அமெரிக்கர்களால் இனி இந்த ஜன்மத்தில் முடியாது.
அடுத்த இடத்தில் நாம் வருகிறோம்.இன்று சீனாவை விட நாம் ஐந்து மடங்கு பின் தங்கிய நிலையில் இருந்தாலும் கூட சீனாவை சமன் செய்ய நம்மால் மட்டுமே என்றும் மேற்கு உலகம் மதிப்பாய்வு செய்து வைத்திருக்கிறார்கள்.
இவையெல்லாம் ஒரு புறம் இருக்க…… இந்தியர்களின் எழுச்சி பலரை…. அதிலும் குறிப்பாக பல மேற்கு உலக வாசிகளை… பொரும செய்திருக்கிறது. தடை ஏற்படுத்திட துடிக்கிறார்கள். இதற்கு உபாயமாக உலகின் மிக பெரிய ஜனநாயகத்தை… நம் இந்திய தேசத்தை, அதன் வாக்காளர்களை…. வாக்கு வங்கி அரசியலாக உருமாற்றி .. அதனை கொண்டே வீழ்த்திட துடிக்கிறார்கள்.
இது நிச்சயமாக வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் திறக்க திட்டமிட்டுள்ள ராமர் கோவிலில் வெளிப்பட இருக்கிறது.அது குறித்தான பறவை பார்வையில் இன்று தொடங்கி இந்த கட்டுரை தொடர் வரவிருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் நம் தமிழகத்தின் பங்களிப்பு தற்போது உள்ள மத்திய அரசில் இல்லாத காரணத்தால் நாம் என்னவெல்லாம் இழந்து இருக்கிறோம் என்பதே நம்மில் பலருக்கு தெரியாது இருக்கிறது. இஃது உலக அளவிலான அரசியலிலும் ஓர் குறிப்பிட்ட பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெளிப்பார்வைக்கோ அல்லது மெயின் ஸ்ட்ரீம் மீடியாவிலோ… பிரபலமான சமூக ஊடகங்களிலோ இது குறித்தெல்லாம் பேசப்படவேயில்லை என்பது கவலைக்குரிய விஷயம் ஆகும்.
நம் தமிழகத்தினை பொறுத்தவரையில் ஐந்து திணைகளாக … முல்லை மருதம் எனப் பெயர் கொடுத்து வகைப் படுத்தி இருந்ததை போன்று … கோவிலும், கோவிலை சார்ந்த இனமும் என்கிற ரீதியிலான அவதானிப்பு இனி வரும் காலங்களில் ஏற்படக்கூடும். காலங்காலமாக கலாரசனையுடன் நேர்த்தியான நிர்வாகவியலை காண்பித்த … கலாச்சாரத்தை கட்டிக்காத்த … கோவிலை மையப்படுத்தின சமூகத்தை மீள் கட்டமைப்பு செய்வதாக அது அமையும்.
நிறையவே விவாதிப்போம்.
இறுமார்ப்புடன் தலைநிமிர்ந்து நம் சமூகத்தை காப்போம். வளமான தமிழகம். வலிமையான பாரதம் என்பது இனி செயலில்..
- ‘ஜெய் ஹிந்த்’ ஸ்ரீராம்