இஸ்ரேல் நடத்திய சைபர் தாக்குதல். லெபனானில் பல்வேறு பகுதிகளில் இருக்கும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை “முடித்துவிட” இஸ்ரேல் திட்டமிட்டது. ஹிஸ்புல்லா ஆட்கள் மொபைல் ஃபோன் வைத்துக் கொண்டால் ஹேக்கிங், வைரஸ், ஸ்மார்ட் ஃபோன் கண்காணிப்பு என்று இஸ்ரேல் இறங்கி அடிக்கும் என்று பயத்து பழைய தொழில்நுட்பமான பேஜர் மூலம் தகவல் பரிமாறி வந்தனர். இதற்கென படு ரகசிய பேஜர் நெட்வொர்க் வைத்திருந்தனர்.
இஸ்மாயில் ஹனியா சாவுக்குப் பிறகு ஈரான் கமேனி உள்ளிட்ட தலைவர்களுக்குப் பாதுகாப்பை அதிகப்படுத்தியது. காரணம் தலைவர்களை இஸ்ரேல் குறி வைக்கிறது என்று கணித்தனர். ஆனால் இஸ்ரேல் தலைவர்களோடு சேர்த்து களத்தில் இறங்கும் பயங்கரவாதிகளையும் இம்முறை குறு வைத்து அடித்துள்ளது.
பேஜர் நெட்வொர்க்கை ஊடுருவி அதில் செய்தி அனுப்புவதன் மூலம் ஒரு codeஐ சேர்த்து அனுப்பி ஏறத்தாழ 3000 பேஜர்களை இரண்டு நிமிடங்களுக்குள் பேட்டரி வெடிக்குமளவு சூடாக்கி வெடிக்க வைத்துள்ளது இஸ்ரேல். இதனால் 4000 பேருக்கு மேல் இடுப்புக்குக் கீழே காயம்பட்டு ஏறத்தாழ 2800 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். 20-25 பேர் இறந்திருக்கலாம் என்று வெவ்வேறு தகவல்கள் உள்ளன. எண்ணிக்கை அதிகமாக வாய்ப்புண்டு என்று செய்திகள் வருகின்றன.
ஹிஸ்புல்லா ஆட்கள் தனியான ரகசிய ரேடியோ நெட்வொர்க் மூலம் இஸ்ரேலுக்குத் தெரியாமல் பேசிவந்தனர். கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பல்வேறு ஹிஸ்புல்லா தளங்களில் இஸ்ரேலின் சைபர் தாக்குதல் நடந்துள்ளது. இதனால் இனி தகவல் பரிமாற்றம் எப்படி நடக்கும் என்று கேள்வி எழுகிறது.
இந்நிலையில் ஏறத்தாழ 500க்கும் அதிகமான ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் தலைமாட்டில் பேஜரை வைத்துக்கொணனு உறங்கிய நேரத்தில் பேஜர் வெடித்ததால் மூளை, கண், காது பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் சொல்கிறார்கள்.
மேலும் விவரங்களை ஆராய்ந்த அமெரிக்க ஐரோப்பிய உளவு மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்தக் கருவிகள் தைவானின் Gold Apollo என்ற நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்டவை என்று தெரிவித்தனர். Gold Apollo நிறுவனத்தலைவர் சூ சிங் குவாங் இது தங்களது தயாரிப்பு அல்ல என்றும் BACK என்ற நிறுவனம் தங்களிடம் உரிமம் பெற்றுத் தயாரித்த AR-924 மாடல் பேஜர் என்றும் இதற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேற்கொண்டு விசாரிக்கையில் ஹிஸ்புல்லாவுக்குப் பேஜர் விற்ற கம்பெனியே இஸ்ரேலிய மொசாத் கட்டமைத்த நிறுவனம் என்றும் ஐரோப்பாவில் வியாபாரம் பேசி தைவானில் பேஜர் வாங்கி வெடிக்கும் குறு கருவி ஒன்றை பேட்டரியில் சேர்த்து அதைப் புரோகிராம் செய்து வைத்து ஹிஸ்புல்லாவுக்கு விற்றுவிட்டனர் என்கிறார்கள். அதனால் தான் இத்தனை விரைவாக வெடிக்க வைத்து இத்தனை பேரை இனி படுத்த படுக்கை தான் என்றாக்கிவிட்டனர் என்று தெரிய வருகிறது. சம்பவத்தில் லெபனானுக்கான ஈரான் தூதரும் காயமடைந்துள்ளாராம். “மிலிட்டரி! நீ எங்கய்யா அங்க போனே?” என்ற கேள்விக்கு பதில் இல்லை.
இஸ்ரேல் இதுவரை சம்பவம் பற்றி வாயே திறக்கவில்லை. ஈரானும்.
- அருண்பிரபு
லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கம் செல் போன் பயனடுத்தினால் இஸ்ரேல் ‘ஹேக்’ செய்து விடுகிறது என்பதால் பழைய தொழில்நுட்பமான ‘பேஜர்’ பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டார்கள்.
நேற்றிரவு ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மற்றும் லெபனான் மக்களிடம் இருந்த பேஜர்கள் திடீரென பயங்கர சூடாகி ஒரே சமயத்தில் வெடித்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் இறந்தனர். பல ஆயிரம் பேர் காயம். ஆம்புலன்ஸ்களில் ஒலியால் லெபனானே அதிரத் தொடங்கியது.
எலக்ட்ரோ மேக்னட்டிக் பல்ஸஸ் பயன்படுத்தி தெர்மல் ரன் அவே (Thermal run away) எனும் அதீத சூட்டினை உருவாக்கி, ஒரு மெஸ்ஸேஜ் மூலம் அதை ட்ரிக்கர் செய்து, லெபனான் மக்கள் கையிகிருந்த ஒவ்வொரு பேஜரையுமே ஒரு குட்டி டைம் பாமாக இஸ்ரேல் மாற்றி இருக்கக் கூடும் என விஷயம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.
பேஜரின் தம்மாத்துண்டு குட்டி பேட்டரியே இத்தனை வேலை செய்யும் போது, சீனாவில் இருந்து இறங்கும் கோடிக்கணக்கான மிகப்பெரிய செல் பேட்டரிகளை வைத்து என்னவெல்லாம் செய்யலாம் ? நினைத்தாலே தலை சுற்றுகிறது.
அமெரிக்க-ஜப்பான் போர் அணுகுண்டை அறிமுகப்படுத்தியது, ஈரான்-ஈராக் போர் ரசாயன யுத்தத்தை அறிமுகப்படுத்தியது, ரஷ்ய-உக்ரைன் போர் ட்ரோன் போரை அறிமுகப்படுத்தியது, தற்போது அதன் அடுத்த கட்டமாக வீட்டு எலக்ட்ரானிக் பொருட்களையே ஆயுதமாக்கும் போரை உருவாக்கி உள்ளது இஸ்ரேல்-லெபனான் போர். போரின் தன்மையும், தொழில்நுட்பமும் மாறிக் கொண்டே வருகிறது. இந்தியா இவற்றில் இருந்தெல்லாம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.
- பி.எஸ். நரேந்திரன்
யோ இஸ்ரேல்… என்னய்யா இதெல்லாம்???
லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் பேஜர் (pager) மூலம் குழுவுடன் தொடர்பில் இருந்து வருகிறார்கள். இன்று அந்த பேஜர்கள் வெ*டித்து நூற்றுக்கணக்கான ஹிஸ்புல்லாக்கள் மர்கயா.
ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளை நிரப்பி வருகிறார்கள். (அத்தனை பயங்கரவாதிகள்)!!
மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால் சிகிச்சையளிக்க முடியாமல் திணறுகிறார்கள்!
பேஜர்களை கைகளில் வைத்திருந்த்வர்கள் கைகள் போச்!
பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்தவர்களுக்கு இனி வாரிசுகள் கிடையாது!
இந்த மாதிரி அவர்கள் உபயோகிக்கும் பேஜர்களை வெ*டி*க்க வைத்து அவர்களை முடிப்பது என்ன டெக்னிக் டியர் நேத்தன்யாஹூ ஜி??
- செல்வநாயகம்