பெண் பயணிக்கு ஓடும் ரயிலில் மாரடைப்பு! கையில் ஏந்தி விரைந்தோடிய காவலர்! குவியும் பாராட்டு!

save-the-life-1
save-the-life-1

ஓடும் ரயிலில் மாரடைப்பு ஏற்பட்ட பெண் பயணியை காவலர் ஒருவர் கைகளில் ஏந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

கேரள மாநிலம் வடகராவில் இருந்து திருச்சூருக்கு ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வடகராவில் இருந்து திருச்சூருக்கு சென்ற ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் அனிதா என்ற பெண் பயணி பயணம் செய்தார்.

திருச்சூர் அருகே ரயில் சென்ற போது அவர் ரயிலில் மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதை கவனித்த சக பயணிகள் இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் ரயில்வே போலீசாருக்கும் இதுகுறித்து தகவல் தெரிவித்தன

ரயில்வே போலீஸ் அதிகாரிகள் திருச்சூர் ரயில் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்து மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யும்படி உத்தரவிட்டனர்.

அந்த ரயில் திருச்சூர் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்ததும் அங்கு பணியில் இருந்த ரயில்வே போலீஸ்காரர் ஓமணக்குட்டன் மின்னல் வேகத்தில் செயல்பட்டார். வீல் சேர், ஸ்டெச்சர் போன்றவற்றிற்கு காத்திருக்காமல் அவரே உடனடியாக ரயில் பெட்டிக்குள் நுழைந்தார். அங்கு மயக்க நிலையில் இருந்த அந்த பெண் பயணியை மீட்டு கைகளில் தூக்கிச் சென்றார். தயாராக இருந்த மருத்துவர்கள் திருச்சூர் ரயில் நிலையத்தில் அந்த பெண்ணுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

பின்னர் அந்த பயணி திருச்சூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் ரயில் பயணத்தில் அந்த பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு வந்ததால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டது என்றும் தெரிவித்தனர்.

பெண் பயணியை உரிய நேரத்தில் காப்பாற்றிய ரயில்வே காவலர் ஓமணகுட்டனை போலீஸ் அதிகாரிகளும், மருத்துவர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். பெண் பயணியை காவலர் ஓமணகுட்டன் இரண்டு கைகளில் ஏந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories