விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அவ்வப்போது ஏதாவது ஏடாகூடமாக செய்திகள் வெளியே கசிந்துவிடும். சில நேரங்களில் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வருபவர்கள், தங்களை அறியாமல் பிக் பாஸ் வீட்டில் நடப்பவற்றை புட்டுப் புட்டு வைத்துவிடுவார்கள்.
பிக்பாஸ் 2 தொடங்கியபோது, யாருக்கும் தெரியாமல் சர்ப்ரைஸாக பிக்பாஸ் 1ன் மூலம் புகழ் அடைந்த நடிகை ஓவியாவை திடீரென உள்ளே புகுத்தினார்கள். ஒரு நாளுக்குள் அவர் ஓடி வந்துவிட்டார் அந்த வீட்டில் இருந்து! அப்போதுதான் ஐயய்யோ என்று அலறியபடி, வீட்டில் இருக்கும் மற்றவர்களைப் பார்த்து… உங்களை எல்லாம் பாத்தா பாவமா இருக்கு… நல்லா அனுபவியுங்க” என்று சொல்லி வந்தார். அந்த வீடியோ அப்போது ரொம்பவே பாப்புலர் ஆகிவிட்டது.
இப்போது அந்த வீட்டில் இருந்து வெளியேறியுள்ள பாடகி ரம்யா போட்டுள்ள வீடியோ அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. `பிக் பாஸ்’ வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற்றப்பட்ட ரம்யா, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில், கடந்த இரண்டு வாரமாக அதிரடி திருப்பங்களை வைத்து மக்களைக் குழப்பி வருகிறார் `பிக் பாஸ்’. கடந்த வாரம் நித்யா வெளியேற்றப்பட்ட போது, இணையத்தில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி சொன்னது போல், ஓட்டிங் சிஸ்டம் சரியில்லை என்று பார்வையாளர்கள் குறைப் பட்டுக் கொண்டனர்.
அதேபோன்று, இந்த வாரம் ரம்யா வெளியேற்றப்பட்டுள்ளார். அதற்கும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், தான் வெளியேற்றப்பட்டதற்காக யாரும் ஃபீல் பண்ண வேண்டாம். ப்ளீஸ். அவங்க வெளியேத்தலைன்னாலும் நானே ஓடி வந்திருப்பேன். என்னால அதுக்கு மேல அந்த வீட்ல இருக்க முடியாது, செம கடுப்பு என்ற ரீதியில் ரொம்பவே ஃபீல் செய்து ரம்யா தனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து சிலவற்றைக் கூறியுள்ளார்.
ரம்யா தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், “இந்த வீடியோ உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதற்காகவே. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த பிறகு, நீங்கள் எனக்கு இவ்வளவு ஆதரவு கொடுத்திருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். பிக் பாஸ் வீட்டுக்குள் நான் நானாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன். ஒரு சில இடங்களில் கோபமாக நடந்து கொண்டது உண்மை. ஆனால், என் கோபத்தில் நியாயம் இருந்தது என்பதில் உறுதியாக இருக்கிறேன். என்னை பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றியதற்கு, பலர் வருத்தம் தெரிவித்து எனக்கு மெஸேஜ், மெயில்ஸ் என நிறைய அனுப்பியிருந்தீர்கள். ஆனால், வெளியில் வந்தது எனக்கு மகிழ்ச்சிதான். என்னால் இதற்கு மேல் அந்த வீட்டில் இருக்க முடியாது. அந்த வீட்டுக்குள் எப்போதுமே சண்டைதான். நீங்கள் பார்ப்பது ஒரு மணி நேரம்தான். ஆனால், 24 மணி நேரமும் சண்டைதான். கண்டிப்பாக என்னால் அங்கு இதற்கு மேல் இருக்க முடியாது. உங்கள் ஆதரவு எனக்கு எப்போதும் வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
Thank you so much everybody for all the love and support. I am completely overwhelmed. Love you all! ❤️ pic.twitter.com/0GWBPqGiFp
— Ramya NSK (@SingerRamya) July 23, 2018





