
திருவோணம் மலையாள நாட்டின் முக்கியத் திருவிழா! கடவுளின் சொந்த தேசம் என கௌரவத்துடன் புகழப்படும் கேரள மண்ணுக்கு அம்மண்ணின் மகாராஜன் மாபலி சக்ரவர்த்தி திருவோண நன்னாளில் மக்களைக் காண வரூகிறான்.
மக்களின் மகிழ்ச்சியை, மனநிலையைக் காண வருகிறான். ஆனால் இந்த முறை, யார் செய்த பாவத்தாலோ வெள்ளத்தின் கோரப் பிடியில் சிக்கி மலையாள தேசமே மகிழ்ச்சியைத் தொலைத்து விட்டது. இந்த நிலையில்தான் இந்த முறை மாபலி தன் மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு இந்தத் திருவோண நன்னாளில் வருகிறான்.. வரவேற்போம் வழக்கமான மன மகிழ்வுடன்!



