வான்கோழி ஆட கண்டிருந்த கானமயில்போல…! திமுக., தலைவரே உங்க பாணியிலயே சொல்லுறோம்…!

Published:

dmk nalvar - 2026

யாரு, யாரைப் பாத்து சவால் விடறதுன்னு ஒரு விவஸ்தை வேண்டாமா ? புதிய தலைவரே, ஏதோ, அண்ணா உருவாக்குன மடத்த உங்க அப்பா ஆட்டையப் போட்டு 50 வருஷம் தலைவரா இருந்தாரு –

அவர் கோமால இருக்கும்போது கூட அந்தப் பதவிய உங்களுக்குத் தரல – ஆள் போனதுக்கு அப்பறம் நோகாம வந்து பதவில உட்காந்திருக்கற நீங்க எங்க ?

1980-ல ஆரம்பிச்ச பா.ஜ.கவுல – ஆரம்பிச்சதுல இருந்து இன்னைக்கு வரைக்கும் 38 வருஷத்துல மொத்தம் 10 தலைவர்கள் பாத்தாச்சு –

70 வருஷமா இருக்கற கட்சில இப்பத்தான் இரண்டாவது தலைவரா வந்து இருக்கீங்க – எது ஜனநாயகக் கட்சி ?

சரி இருக்கட்டும் – தி.மு.க ஆரம்பிச்சு 30 வருஷம் கழிச்சு உருவான கட்சி பா.ஜ.க – இன்னைக்கு அந்தக் கட்சியோட அடிமட்டத் தொண்டன் பிரதமரா இருக்காரு –
அடிமட்டத் தொண்டன் ஜனாதிபதியா இருக்காரு – துணை ஜனாதிபதியா இருக்காரு – அந்தக் கட்சி இந்தியாவ மட்டுமல்ல – 15 மாநிலத்துல தனியா ஆட்சில இருக்கு –
4 மாநிலத்துல கூட்டணி ஆட்சி நடத்துது –

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

அது மட்டுமல்ல உலகத்துலயே பெரிய கட்சியா கின்னஸ்ல பதிவாகியிருக்கு – கிட்டத்தட்ட 345 MP க்கள் உள்ள கட்சி – (272 + 73) 1500 MLA க்கள் உள்ள கட்சி – அப்படிப்பட்ட கட்சிய ஒரே ஒரு லோக்சபா உறுப்பினர் கூட இல்லாத உங்கள் கட்சி அழித்து விடுமா ?

சரி கட்சிய விட்டுடுவோம் – 14 வருஷம் முதல்வர், நாலு வருஷம் பிரதமரா இருந்த மோடியோட சொத்து என்ன தெரியுமா?  இந்த நாடு மட்டும்தான் – அவரோட குடும்பம் எப்படி இருக்குன்னு நாட்டுக்கே தெரியும் –

ஆனா, மைனாரிட்டியா தமிழ்நாட்ட ஆண்ட உங்க குடும்பம் இன்னைக்கு எப்படி இருக்கு? முரசொலி மாறன் – தயாநிதி – அழகிரி – கனிமொழி – ன்னு எல்லாருக்கும் பதவிகளப் பங்கு போட்டுக் கொடுத்த குடும்பக் கட்சி உங்களோடது – அது மட்டுமா?-
உதயநிதி ஸ்டாலின் தயாநிதி அழகிரி கயல்விழி – ன்னு அடுத்தடுத்து நண்டு சிண்டெல்லாம் பதவிக்கு வரிசையா நிக்குது – அஞ்சுவாட்டி முதலமைச்சர் ஆயிட்டு 500 தலைமுறை உட்காந்து சாப்டற அளவுக்குச் சொத்து சேத்தாச்சு –

ALSO READ:  வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

டிவி சேனல் மட்டும் 45 இருக்கு – போதாததுக்கு Sun Direct, SCV-ன்னு ஒவ்வொரு குடிமகனும் மாசா மாசம் உங்க குடும்பத்துக்குக் கப்பம் கட்டியே ஆகணும்ங்கற அளவுக்குக் கொண்டு வந்தாச்சு – அசையாச் சொத்துக்கள் கணக்கேயில்ல –

அசையும் சொத்துக்கள்னா – லம்போர்கினில இருந்து ஹம்மர் வரைக்கும் உங்ககிட்ட இல்லாத காரே இல்ல – இப்படிக் கொஞ்சங்கூட வெக்கமே இல்லாம மக்கள் பணத்தத் திருடி சொகுசு வாழ்க்கை வாழற நீங்க – மோடிய எதுக்கப் போறீங்களா ?

அவர் பேரச் சொல்ற தகுதி கூட உங்களுக்குக் கிடையாது – மைக் கெடைச்சா எதை வேணும்னாலும் பேசிசிடறதா ? இன்னைக்கி ஒரு தெருமுனைக் கூட்டம் போட்டாக் கூட – காசு கொடுத்துக் கூட்டத்தக் கூட்டற கேவலமான நெலமைல தி.மு.க இருக்கு –

ஆனா, மோடிக்காக உயிரைக் கூடக் கொடுக்கக் கோடிக்கணக்கான இளைஞர்கள் இங்க இருக்காங்க – அதுதான் அவரோட சொத்து –

2019 மட்டுமல்ல 2024-லயும் கூட அவர் தான் பிரதமர் – இந்தியா மட்டும் அல்ல –
கூடிய விரைவில் தமிழ்நாட்டுக்கும் காவிப் பெயிண்ட் அடிச்சே தீருவோம் – ஏன்னா, நாங்க நேர்மையா வளர்ந்துகிட்டு இருக்கோம் – நீங்க வேகமா அழிஞ்சிகிட்டு இருக்கீங்க!

ALSO READ:  அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

– ந.முத்துராமலிங்கம் –

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img