மேற்கு இந்தியத் தீவுகளுடன் இந்திய அணி எளிதாகப் பெற்ற டெஸ்ட் வெற்றி!

லைஃப் ஸ்டைல் விளையாட்டு

test match india WI - 2026

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது இந்திய அணி !

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வென்றதன் மூலம்,2க்கு 0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது இந்திய அணி.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 367 ரன்கள் எடுத்தது.

இதன் பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி துவக்கம் முதலே திணறியது. உமேஷ் யாதவ், அஸ்வின், ஜடேஜா ஆகியோரின் பந்துவீச்சில் வரிசையாக விக்கெட்கள் சரிந்தன. இறுதியில் 127 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது மேற்கு இந்திய தீவுகள் அணி.

பின்னர் 72 ரன் என்ற எளிய வெற்றி இலக்குடன் ஆடிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி வெற்றிக்கான ரன்களை எடுத்தது. இதன் மூலம் 2 டெஸ்ட் போட்டிகளையும் வென்ற இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.