ஒரே உதடாம் நூறு பல்லாம் எப்படி ? தெரிந்து கொள்வோமா?

இலக்கியம் உங்களோடு ஒரு வார்த்தை உரத்த சிந்தனை

pan tree - 2026

விடுகதைகள்:

  1. கழுநீர் குடிக்காது. புல் மேயாது. ஆனால் பானைக்குப் பால் கொடுக்கும். அது என்ன?

  2. கொம்பிருக்கு எருமையல்ல. அம்பாரி இருக்கு யானை அல்ல.
    அது என்ன?

3.நூறு பல். ஒரே உதடு. அது என்ன?

  1. மெல்லிய தூண். ஏற முடியாது. இறங்க முடியாது. அது என்ன?

  2. ஐயாவுக்கு எட்டாது. அம்மாவுக்கு எட்டும். அது என்ன?

  3. சிவப்பு பழம். அதன் மேல் ஈ கூட மெய்க்காது. அது என்ன?

  4. காலில்லை நடக்கும். கண்ணில்லை அழும். அது என்ன?

  5. நின்றால் நிற்கும். அமர்ந்தால் சாயும். அது என்ன?

விடைகள் :

1.  பனைமரம். 2. நத்தை.  3. மாதுளை. 4. ஊசி. 5. உதடுகள் 6. நெருப்பு  7. மேகம். 8.

நிழல்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.