விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், பழனியம்மாள் தம்பதிகளின் மகள் ஜெயசூர்யா வயது 17 . இவர் ஈச்சனாரி அருகே உள்ள ரத்தினம் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று அதிகாலை தற்கொலை செய்ய வேண்டும் என்று விடுதியில் இருந்து வெளியே சென்று கல்லூரிக்கு அருகே உள்ள தண்டவாளத்தில் தலை வைத்து படுத்துள்ளார்.
அவ்வழியாக வேகமாக வந்த ரயிலைக் கண்டு அச்சமடைந்த மாணவி தண்டவாளத்தை விட்டு எழுந்து ஓட முயற்சி செய்திருக்கிறார். ஆனால், அதற்குள் ரயில் மாணவியின் மீது மோதிவிட்டது. இதில், தூக்கி வீசப்பட்ட மாணவிக்கு தலை மற்றும் கை, கால் என உடம்பின் பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக மாணவியை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது, கோவை அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை முயற்சி ! கணப்பொழுதில் தப்பிய கல்லூரி மாணவி !
Popular Categories



