இந்தக் காட்சியைக் கண்டு எனக்குத் தோன்றியது… உங்களுக்கு என்ன தோன்றுகிறது? தன் வாகனத்தைத் தம்பிக்குத் தந்து அண்ணன் அயர்ந்து அமர்ந்து விட்டார்! எந்த சோதிடன் பலன் சொன்னானோ? வாகன மாற்றம் உண்டு என்று? ஆயிரம்தான் இருந்தாலும், அதிககனம் இருந்தாலும், இயல்புக்கு மாறாக இளவல் நிற்பினும் முழி பிதுங்குது மூஞ்சுறு! சோடி தேடி ஓடிப் போனதோ இல்லை… சோகத்தோடே பறந்து போனதோ? தோகை மயில்! கவலை அறுத்த உள்ளம் கருணை பொங்கும் கண்கள் முறுவல் பூத்த முகம் முருகன் என்றால் அழகன்தானே! ஒய்யாரக் கோலம்… ஓய்வான நேரம்! ஆண்டி என நின்றதால் அச்சம் இல்லை. மடியில் கனம் இல்லை மனத்தில் பயம் இல்லை… உணர்ந்த உண்மை இது! மனையாள் பயம் இல்லை மாலைக்குள் திரும்ப வேண்டாம்! கைகட்டி சேவகம் என எங்குமே குனிந்திருக்க வேண்டாம்! குடும்பக் கவலையு மில்லை… குழந்தை குட்டி பிக்கல் பிடுங்கல் கொஞ்சமும் இல்லை என்றால் முகத்தின் புன்னகை முழுநேரம்தானே! உணர்ந்த உண்மை இது! கையில் கொண்ட கோல் ஒன்று நிமிர்ந்து நிற்கும் நிலைத்திருக்கும்! செங்கோல் வழுவாது… செங்கைவிட்டு நழுவாது! (சென்னை, கே.கே.நகர் சிவன் பூங்கா அருகிலுள்ள, விநாயகர் கோவில் மண்டபத்தில் க்ளிக்கியது!)
வாகன மாற்றம் என்று சோசியன் சொன்னானோ?
Popular Categories



