spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇலக்கியம்உங்களோடு ஒரு வார்த்தைஇன்று தினசரி தளத்தின் 10ம் ஆண்டு விழா! அனைவரும் வருக!

இன்று தினசரி தளத்தின் 10ம் ஆண்டு விழா! அனைவரும் வருக!

- Advertisement -

மார்ச் 10ம் தேதி இன்று, சென்னை மயிலாப்பூர் – கோகலே சாஸ்திரி ஹாலில், நம் தினசரி இணையத்தின் 10ம் ஆண்டு விழா நடைபெறுகிறது. அன்று, நம் தினசரி தளத்தில் கட்டுரைகள் எழுதி வரும் எழுத்தாளர்கள், சமூக சேவகர்கள், ஆன்மிகத் தொண்டர்களைத் தேர்ந்தெடுத்து தெய்வத் தமிழர் விருதுகளை வழங்கி வருகிறோம். இந்த வருடம்,

திரு. கு.வை. பாலசுப்பிரமணியன் அவர்கள் (எழுத்தாளர், வானிலையாளர்)
திரு. பி. ஜகந்நாத் அவர்கள் (வழக்குரைஞர்)
திரு. டி.எஸ். வேங்கடேசன் அவர்கள் – (ஊடகவியலாளர்)
உடன், 4. ஓவியரும் எண்ணங்களின் சங்கமம் அமைப்பை நடத்திக்கொண்டு வரும் சமூக சேவகருமான ஜெ.பிரபாகர், 5. திருமதி ஜெயந்தி ஐயங்கார் ஆகியோருக்கு தெய்வத் தமிழர் விருதுகளை வழங்கி கௌரவிக்கிறோம்.


விருது பெறுபவர்கள் குறித்து…

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

  • இயற்பியலில் முது அறிவியல், தமிழ், வரலாற்றில் முதுகலைப் பட்டங்கள், ஆய்வியல் நிறைஞர் பட்டம், மற்றும் தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர்.
  • வானிலை ஆய்வுத் துறையில் 39 ஆண்டுகள் பணிபுரிந்து வானிலையாளராக ஓய்வு பெற்றவர். வானிலை தொடர்பான கட்டுரைகள் பல எழுதியுள்ளார். 21 நூல்கள் எழுதியுள்ளார்.
  • பிரதமர் மோதி, அமித் ஷா ஆகியோரின் பேச்சுகளை தொலைக்காட்சி நேரலையாக தமிழில் மொழிபெயர்க்கிறார்,
  • தினசரி தளத்தில் ‘திருப்புகழ் கதைகள்’, பாரதியின் கண்ணன் பாட்டு, விநாயகர் நான்மணிமாலை பற்றி தொடர் கட்டுரைகள் எழுதியவர், விளையாட்டு, ஆன்மீகம், வானிலை என தினசரியில் செய்திக் கட்டுரைகளை எழுதி வரும்…

டி.எஸ். வேங்கடேசன்

  • 40 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல், ஊடகப் பணியில் தன்னை கரைத்துக் கொண்டவர், வணிகவியல் பட்டதாரி, இதழியலில் மேற்படிப்பு படித்தவர்,
  • தி ஸ்டேட்ஸ்மென், ஷிப்பிங் டுடே, டெக்ஸ்காட் கூரியர், கேபிடல் மார்க்கெட், சதர்ன் கேபிடல் நியூஸ், சென்னை நூன் டைம், நியூஸ் டுடே, என ஆங்கிலப் பத்திரிகைகளிலும், சன் நியூஸ், சத்யம் டிவி, ஜி டிவி, இமயம் டிவி என டிவி.,க்களிலும், தினகரன், தினமணி இதழ்களிலும் பணியாற்றியவர்,
  • ஆர்கனைசர் வார இதழிலும், தளத்திலும் தொடர்ந்து அரசியல் சமூக வணிகக் கட்டுரைகளை எழுதி வருபவர்,
  • தினசரி தளத்தின் செய்தியாளர்களில் ஒருவருமான …

பி. ஜெகந்நாத்

  • சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர், சநாதனப் பற்றுடன் போராளி, பொதுநல வழக்கினால் தமிழகத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு அமையக் காரணமானவர்,
  • திருப்போரூர் முருகன் கோயில், ஆளவந்தார் நாயக்கர் கோயில் நில ஆக்கிரமிப்பு விவகாரங்களில் பொது நல மனுக்களின் மூலம் தீர்வு கண்டவர்,
  • ஆலயங்கள், ஆலய இடங்கள் தொடர்பு பிரச்னைகளில் வென்று நல்ல தீர்ப்புகளை சமுதாயத்துக்கு பெற்றுத் தந்தவர்,
  • சட்டப் பிரச்னைகள் ஏற்படும் போது தேசியக் கண்ணோட்டத்தில் அணுகி தமிழகத்தின் தேசியக் கருத்தோட்டத்தை வலுவாக வெளிப்படுத்துபவர்,

ஜெயந்தி ஐயங்கார்

  • பொருளாதாரம், சமூகவியல், தகவல் தொழில்நுட்பங்களில் முதுகலையும் பொருளாதாரத்தில் எம்.பில்., பட்டமும் பெற்றவர்.
  • 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு தகவல் தொழில்நுட்ப நுண்திறன் பயிற்சி அளித்து வேலைவாய்ப்புக்கு உதவியவர்.
  • பல்வேறு நிகழ்ச்சிகளை வழிநடத்தியும் தொகுத்தும் கொடுத்து மெருகேற்றுபவர்.
  • கம்ப ராமாயணம், ஆழ்வார் பாசுரங்களில் விருப்பம் கொண்டு ஆன்மிகச் சொற்பொழிவுகளை நிகழ்த்துபவர்..

ஓவியர் ஜெ.பிரபாகர்

  • அசோக் லேலண்ட், டிசிஎஸ் உள்ளிட்டவற்றில் பணியாற்றி, தொடக்க காலத்தில் நல்லோர் வட்டம் அமைப்பின் மூலம் சமூக சேவைகளில் களம் இறங்கியவர்,
  • என்டிஎஸ்ஓ., தன்னார்வத் தொண்டு அமைப்பு மூலம் தமிழகம் முழுக்க கல்வி, மருத்துவ, ஏழைகளுக்கான சேவைப் பணிகளை செய்து வருபவர்,
  • அவற்றின் ஒருங்கிணைப்புத் தளமாக ‘எண்ணங்களின் சங்கமம்’ அமைப்பை சிறப்பாக நடத்தி வருபவர்,
  • கோட்டோவியத்தில் பெரும் ஈடுபாடு கொண்டு, தேசத் தலைவர்கள், ஆலயங்கள், இறை உருவங்கள், திருமேனிகளை அழகாகக் காட்சிப்படுத்துபவர்…

இந்நிகழ்ச்சியில், திருக்கோவிலூர், தபோவனம், ஸற்குரு ஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகள் குறித்த இசைச் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். ஹரிகதை சிந்துஜா சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.

நிகழ்ச்சிக்கு தபோவனத்தின் செயலாளரும் புதுச்சேரி ஸற்குரு ஹோட்டல் மேலாண் இயக்குநருமான திரு. கே. அமர்நாத் அவர்கள் தலைமை தாங்கியும், நம் கலைமகள் ஆசிரியர் திரு. கீழாம்பூர் அவர்கள் முன்னிலை வகித்தும் விருதுகளை வழங்குகிறார்கள்.

அடியேனின் பத்திரிகைப் பணியில் உடன் பயணித்த விஜயபாரதம் – தற்போது ஒரே நாடு ஆசிரியர் திரு நம்பி நாராயணன் அவர்கள், விகடனில் இருந்த (நாங்கள் தமிழில் சிவன் என்று அழைக்கும்), எண்ணற்ற நூல்களை மொழிபெயர்த்துள்ள சிவன், இண்டியன் எக்ஸ்பிரஸ், தினமணியின் ஜி.எம்.ஆக இருந்த ஆர்.வீ.யெஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். தளத்துக்கு ஆதரவாக இருந்து வரும் மதுரை வழக்குரைஞர் திரு. நா.ஸ்ரீனிவாசன் அவர்கள் வரவேற்புரை அளிக்கிறார்.

நம் தளத்தின் வாசக அன்பர்கள், சென்னைவாசிகள் அவசியம் குடும்பத்தினர், நண்பர்களுடன் நிகழ்ச்சிக்கு வந்திருந்து, சிறப்பிக்க வேண்டுகிறோம்.

அன்பன்,
செங்கோட்டை ஸ்ரீராம்
நிறுவுனர், தமிழ் தினசரி தளம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe