கவிதை : ஓரங்க நாடகம்!

ladies lighting kerala - 2026

ஓரங்க நாடகம்! ஒருகோடி பாத்திரம்!
உள்ளத்தில் திரைஏறுது! – கதை
உயிருள்ள வரைஓடுது!
யாரங்கு நாயகன்? யார்நின்று பார்ப்பவன்?
யாருக்காய் அரங்கேறுது? – பிறர்
யாருக்கும் புரியாதது!
*
என்னென்ன ஒப்பனை! ஏதேதோ கற்பனை!
எனைநானே தினம்பார்க்கிறேன்! – என்
இதயத்தில் கனம்சேர்க்கிறேன்!
எண்ணற்ற ஆடைகள்! ஏய்க்கு(ம்)முக மூடிகள்!
எளிதாக தின(ம்)மாற்றுவேன்! – இங்கு
எனைநானே ஏமாற்றுவேன்!
*
அரிதாரம் என்பதென் ஆதாரம் ஆனது!
அதிலுண்மை நிற(ம்)மாறுது! – பொய்
அரங்கேறி எனைமீறுது!
புரியாத சொற்களைப் பூமாலை ஆக்கியே
புதிராயென் வாய்பேசுது! – அதில்
பொய்தானே மணம்வீசுது!
*
இல்லாத ஒத்திகை! எழுதாத வாசகம்!
இருந்தாலும் அரங்கேறுது! – தினம்
இதயத்தில் இஃதூறுது!
சொல்லாத காதைகள்! தொய்யாத காட்சிகள்!
தொடர்கின்ற தேயிவ்வுரை! – நான்
துஞ்சுதினம் அன்றேதிரை!

  • இலக்கியவேல் சந்தர் சுப்ரமணியன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories